மின்னம்பலம் - மதி : வைஃபை ஆன் செய்ததும், ”எல்லா டீமுமே பைனலுக்குள் நுழைந்துவிட்டன” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா டி20 ஜூரம் இன்னும் போகலையே..
நமக்கு என்னய்யா டி20 ஜூரம்.. எலக்ஷன் தேதி அறிவிக்க போறாங்க.. கூட்டணிகளை எல்லாம் பைனல் செய்யுற நேரம் வந்துருச்சுன்னு சொல்றேன்…
ஆனா நடக்குறதை எல்லாம் பார்த்தா அப்படியா தெரியுதுய்யா?
புரியது.. திமுக கூட்டணியில காங்கிரஸ் கட்சியோட மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி தொடர்ந்து பேசிகிட்டு இருக்காங்கன்னுதானே சொல்றீரு..
ஆமாய்யா.. மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுவை கூட்டுன மாணிக்கம் தாகூர், அதிக சீட் தரனும்; ஆட்சியில பங்கு தரனும்; உள்ளாட்சியில கூடுதல் இடங்கள்தரனும்னு தீர்மானம் நிறைவேற்ற வெச்சாரு.. அதோட மட்டுமல்லாம, ’எங்களைத் தாக்கினா நாங்களும் திருப்பி அடிப்போம்’னும் பேசினாரு..
பிரவீன் சக்கரவர்த்தியோ, ’மகளிர் உரிமைத் தொகையை கொடுத்துட்டாலே ஜெயிச்சுடுவோம்னு நினைக்கிறதே மூடநம்பிக்கை’ன்னு அவரு பங்குக்கு திமுகவை சீண்டிகிட்டே இருக்கிறாரு..
இதுல இன்னொரு விஷயம் என்னான்னா, மாணிக்கம் தாகூர்- பிரவீன் எல்லாம் பேசுறது சரி இல்லை.. கட்சி மேலிடம் முடிவு சொல்லும்னு அதே காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் சொல்லி இருக்காரு..
டிவி டிபேட்டுல பேசுன கோபண்ணாவும், ”யாருங்க இந்த பிரவீன் சக்கரவர்த்தி?”ன்னு கேட்டு விளாசிட்டாரு.. மாணிக்கம் தாகூரையும் விமர்ச்சிசாரு கோபண்ணா..
சரிய்யா.. டெல்லியில என்னதான் நடக்குதாம்?
டெல்லி காங்கிரஸ் மேலிடத்தைப் பொறுத்தவரைக்கும் சோனியா- கார்கே இவங்க எல்லாம், ‘திமுக கூட்டணி’யில இருக்கனும்னு நினைக்கிறாங்க..
ராகுல்- பிரியங்கா அவங்க எல்லாம், திமுகவுக்கு எதிரான விஷயங்களை காது கொடுத்து கேட்கிறாங்க.. அதேநேரத்துல திமுகவை விமர்சிச்சு பேசுறதை கண்டுக்காமலும் இருக்காங்க.. அதனாலதான் மாணிக்கம் தாகூர், பிரவீன் எல்லாம் பேசுறாங்க..
இதுக்கு இடையில சோனியா- கார்கேவை மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேத்து சந்திச்சு பேசுனாரு.. இதைப் பத்தி காங்கிரஸ் வட்டாரத்துல விசாரிச்சப்ப, திமுக கூட்டணியில காங்கிரஸ் ஏன் இருக்கனும்? திமுக கூட்டணியைவிட்டு காங்கிரஸ் போனா என்னவெல்லாம் நடக்கும்னு ரெண்டு பேரு கிட்டேயும் ப.சிதம்பரம் விளக்கமா சொன்னாரு..
அதோட, நாம கூட்டணியை விட்டு வெளியே வந்துட்டா என்னவெல்லாம் நடக்கும்னு சொல்லிட்டு, தமிழ்நாட்டுக்குள்ள பாஜக ஈஸியாக நுழையவும் சான்ஸ் இருக்கு.. பாஜக உள்ளே நுழைய நாமளே வழியை ஏற்படுத்தி தரனுமா?”ன்னும் சிதம்பரம் கேட்டாரு.. அவரு சொன்னதை சோனியாவும் கார்கேவும் அமைதியாக கேட்டுகிட்டாங்க” என்றனர்.
சிஎம் ஸ்டாலின் வருத்தம் கலந்த கோபத்துல இருக்கிறாருன்னு சொன்னீரே.. திமுகவுல என்ன நிலவரம்?
ம்ம்ம்.. சிஎம் இன்னமும் அதே வருத்தம் கலந்த கோபத்துலதான் இருக்கிறாரு.. போன வியாழக்கிழமை கூட சிஎம் சீரியசா ஒரு டிஸ்கஷன் நடத்தினாரு.. அதை பத்தி திமுக சீனியர்ஸ்கிட்ட கேட்டப்ப, “காங்கிரஸ் ரொம்பவே குடைச்சல் கொடுக்குது இல்லையா.. அதுல சிஎம் ரொம்பவே கடுப்பாகி இருக்காரு… அதனால, “கூட்டணியை பத்தி காங்கிரஸ் கட்சியோட நிலைப்பாடு என்ன? இப்படி குழப்பத்தை ஏற்படுத்துறவங்க மீது என்ன நடவடிக்கை?”ன்னு ஓபனா கேட்டு திமுக தலைமைக் கழகம் சார்பா ஒரு அறிக்கை கொடுக்கலாம்னு யோசனை சொன்னார் சிஎம்..
ஆனா, “இப்போதைக்கு நாம அதுமாதிரி எதுவும் செய்ய வேண்டாம்.. பட்ஜெட் வருது.. அடுத்த 22-ந் தேதி பேச்சுவார்த்தையையே தொடங்கவும் போறோம்.. ஏன் நாம அதுக்குள்ள இந்த மாதிரி அறிக்கை கொடுக்கனும்? வெயிட் பண்ணலாம்”னு சீனியர் அமைச்சர்கள் சொன்னாங்க.. இதை கேட்டுகிட்ட சிஎம்மும் வெயிட் பண்ணுவோம்னு சொன்னாரு..” என்றனர்.
இப்ப லேட்டஸ்ட் தகவல் என்னான்னா, செல்வப்பெருந்தகை பெங்களூரு கிளம்பிட்டாரு.. ”பெங்களூருவுல கார்கேவை சந்திக்க போறேன்.. மாணிக்கம் தாகூர் மேல புகார் சொல்லி இருந்தோம்..அதை விசாரிச்சுட்டு அழைச்சுருக்காங்க..” என பிரஸ்மீட்டுல சொல்லிட்டு போயிருக்காரு செல்வப்பெருந்தகை.. கார்கே சந்திப்புல என்ன பேசுவாங்க? என்ன முடிவு எடுப்பாங்கன்னு காங்கிரஸ் மட்டுமல்ல திமுகவும் பரபரப்பா எதிர்பார்க்குதுய்யா என்றபடியே டைப் செய்து சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக