M. S Rajagopal : என்ன அநியாயம் சார் ...யார் வீட்டு பணம் இப்படி வாரி விடுறாங்க?
5,000 எதுக்கு வந்து ஒருத்தருடைய அக்கவுண்ட்ல போடணும் !
அதுவும் ஒரு கோடியே 30 லட்சம் பேருக்கு ?
ஏற்கனவே 9 லட்சம் கடன்.... இதுல இன்னும் நிறைய வாரி விடுறாங்க...
இதுக்கெல்லாம் என்ன காரணம் நினைக்கிறீங்க ?
ஒண்ணு ஜெயிக்கணும்.. ஜெயிச்சு வந்தா நாம சம்பாதிக்கலாம் ... தோற்றுப் போனா வர்றவன் பாத்துக்கட்டும்.. அதானே !
நாமெல்லாம் உண்மையிலேயே இதையெல்லாம் எதுத்து கேட்கணும் சார் !
நான் : "இப்ப எண்ணூர் துறைமுகம் இருக்குல்ல.. அதை லீசுக்கு விட்டால் என்ன மதிப்பு வரும் ? அதானிக்கு எவ்வளவு ரூபாய்க்கு கொடுத்திருக்காங்க? பக்கத்தில் 300 ஏக்கர் நிலம் 99 வருஷம் லீசுக்கு கொடுத்திருக்காங்க !
இதெல்லாம் மோடி கொடுத்தது... இதுக்கெல்லாம் என்ன மதிப்பு ? எத்தனை ஆயிரம் கோடி இருக்கும் சுமாரா சொல்லுங்க .. இப்ப நான் சொன்னது ஒரு உதாரணம்தான்...
இதேபோல் நிறைய துறைமுகங்கள், விமான நிலையங்கள், கனிமச்சுரங்கங்கள், இயற்கை எரிவாயு எடுக்கும் நிலையங்கள், சோலார் பவர் பிளான்ட்கள் என்று ஏகப்பட்ட சொத்துக்களை மோடி அதானிக்கு வாரி கொடுத்து இருக்கிறார்... இதற்கெல்லாம் என்ன மதிப்பு என்று உங்களுக்கு தெரியுமா?
எத்தனை லட்சம் கோடி என்று உங்களுக்கு தெரியுமா ?
நம்முடைய இந்தியாவின் மொத்த பட்ஜெட்டே 50 லட்சம் கோடி தான் அதில் 15 லட்சம் கோடி கடன் மீதி 35 லட்சம் கோடி தான் இந்தியாவின் மொத்த பட்ஜெட் ஆகும் .
அம்பானிக்கு மட்டும் 25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருக்கிறது .
அம்பானியை விட பணக்காரர் அதானி...
அப்படி என்றால் அதானிக்கு எவ்வளவு லட்சம் கோடிகள் சொத்து இருக்கும் என்று நீங்கள் கணக்கிட்டு கொள்ளுங்கள் !
எல்லாம் யாருடைய சொத்து? யாருடைய பணம்?
இதை எதிர்த்து யாராவது கேள்வி கேட்டீர்களா?
அனில் அம்பானிக்கு 40 ஆயிரம் கோடி தள்ளுபடி பண்ணி இருக்காங்க.. இது பத்தி என்னைக்காவது என்கிட்ட வாக்கிங் போகும்போது பேசி இருக்கீங்களா ?
இப்ப மாத்திரம் ஒரு கோடியே 30 லட்சம் பேருக்கு ₹5000 கொடுத்தது வந்து ஒரு பெரிய விஷயமா என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க ?
நண்பர்: " சார் அது வந்து... "
நான் : இதெல்லாம் உங்களால கேட்க முடியாது சார் !
என்ன மோடி வந்து ராமர் கோயிலை கட்டிட்டாரு.. அவர் ஒரு இந்து மத வெறியர்..
அவர் ஒரு கொலைவெறியோடு முஸ்லிம்களை அடியோடு வெறுக்கிறார்.. நீங்களும் வெறுக்கிறீங்க.. அதனால உங்களுக்கு மோடியை பிடிக்குது.. அவ்வளவுதான் வேற ஏதாவது விஷயம் இருக்கா ?
இது பத்தியெல்லாம் நீங்க யோசிக்கிறதே இல்லையா ?
ஆறாயிரத்து கோடியை ஒரு கோடியே 30 லட்சம் பேருக்கு குடுக்குறதுக்கும் 40 ஆயிரம் கோடியை ஒரே ஆளுக்கு கொடுக்குறதுக்கும் வித்தியாசம் உங்களுக்கு தெரியலையா ?
நண்பர் : நீங்க எதை எதோட கனெக்ட் பண்றீங்க ?
நான்: சரி இத சொல்லுங்க எனக்கு ! உங்களுக்கு எவ்வளவு பென்ஷன் வருது? உங்க வைப்க்கு எவ்வளவு பென்ஷன் வருது?
நண்பர்: " எனக்கு 80,000 வருது அவளுக்கு 70 ஆயிரம் வருது !
நான் : கிட்டத்தட்ட 10 வருஷமா வாங்குவீங்களா?
நண்பர்: 15 வருஷமா வாங்குறோம்!
நான் : கிட்டத்தட்ட வருஷத்துக்கு 18 லட்சம் நீங்களும் உங்க வைஃபும் பென்சனா வாங்குறீங்க !
ஏதோ அரசாங்கத்திலயோ ரயில்வேலையோ பேங்க்லயோ உங்களை தவிர வேற யாருமே வேலை பார்க்க முடியாத வேலையை நீங்க பார்த்து சம்பாதித்து உங்க வாழ்நாள் முழுக்க டயர்டான மாதிரி நீங்க 15 வருஷமா வாங்கிட்டு இருக்கீங்க
இன்னும் ஒரு 15 வருஷம் கூட வாங்குவீங்க!^ உங்க பையன் அமெரிக்காவுலையும் பொண்ணு கனடாவிலேயும் செட்டில் ஆயிட்டாங்க !
இங்க உங்களுக்கு சொந்த வீடு இருக்கு ! சென்னையில இன்னொரு அப்பார்ட்மெண்ட் இருக்கு!
சேலத்தில் ஒரு வீடு வாங்கி போட்டு இருக்கீங்க மகாவலிபுரத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வச்சிருக்கீங்க ... இவ்வளவும் நீங்களும் உங்க மனைவியும் அரசு உத்தியோகத்தில் வேலை பார்த்து சம்பாதிச்ச காசு !
அப்படி என்ன பெருசா இந்த நாட்டுக்கு உழைச்சுட்டிங்கன்னு உங்களுக்கு பென்ஷன் ?
குடும்பத்திற்கு ஒருத்தருக்கு கொடுத்தா போதாதா ?
அதான் வாழ்க்கையில செட்டில் ஆயிட்டீங்கள்ல!
இன்னும் எவ்வளவு காலத்துக்கு எங்க வரிப்பணத்தை சேர்ந்து திங்க போறீங்க?
உங்களுக்கு மருத்துவமனை செலவு கூட கிடையாது..
இன்சூரன்ஸ் இருக்கு சொந்த வீடு இருக்கு..
வாங்குற பென்ஷன் அப்படியே பேங்க்ல போட்டு வச்சிருக்கீங்க !
இது இல்லாம கிராஜுட்டி பிராவிடண்ட் ஃபண்ட் என்று நிறைய பேங்க்ல வேற டெபாசிட் இருக்கு !
ஆனால் நாள் முழுக்க வயல்லயும் காட்லயுமே உழைக்கிறவங்களுக்கு என்ன பென்ஷன் இருக்கு ?
ஒரு மருந்து மாத்திரை வாங்கறது கூட அவங்களுக்கு யார் பணம் தருவா ?
சாகுற வரைக்கும் உழைச்சு தான் சாப்பிடணும்..
அவங்களுக்கு மாசம் ஒரு ஆயிரம் இரண்டாயிரம் அரசாங்கம் கொடுத்தா அது உங்களால பொறுத்துக்க முடியல!
உடனே கொதித்து போய் பேசுறீங்க.. உங்களுக்கு வெக்கமா இல்லையா சார் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக