![]() |
Giri Sundar : தமிழ்நாட்டை ஆண்டுவிட்டுப்போன அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கையான செயலுக்காய், நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை..மனித உயிர்களை படுகொலை செய்த வரலாற்று துக்கத்தை..கருப்பு நாளைப்பற்றி பேசியே ஆகவேண்டும் இன்று.
18.02.1992. கால் நூற்றாண்டுக்கு முன், இதே தேதியில்..
கும்பகோணம் கும்பேசுவரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் விழா.
கோவிலின் குளத்தில் நீராடினால் பாவங்கள் விலகுமென்று திரண்டுவந்த மக்களுக்கு..தங்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு அதுதான் இறுதி நாளென்பது தெரியாது.
ராஜீவ் படுகொலை தந்த பரிசால் ..முதன்முறையாக ஜெயலலிதா முதல்வராகி இருந்த காலகட்டம்.
30 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடி நீராடி செல்கிற ஒரு இடத்தில், முதல்வராக இருப்பவர் கலந்து கொண்டால், மக்களுக்கு என்னென்ன அசௌகர்யங்களையும், ஆபத்துகளையும் அது ஏற்படுத்தும் என ஆராயாமல்.. கணக்கில் கொள்ளாமல்..
மகாமகம் குளத்தில் குளித்தால்,மக்கள் மத்தியில் உங்களுக்கு இதுவரைக்குமாக இருக்கும் அவப்பெயர் அகலும். அடுத்தமுறையும் நீங்கள்தான் முதல்வர் - என
பெங்களூர் ஜோசியர் வெங்கடேசன் குறித்துக் கொடுத்தக் கணக்கை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு தோழி சசிகலாவோடு கும்பகோணத்திற்குப் புறப்பட்டார் ஜெயலலிதா.
முதல்வர் வருகை என்பதால், பாதுகாப்பு கெடுபிடிகள், பொதுமக்களை குளிக்க விடாமல் விரட்டுவதுமென ஓர் அசாதாரணமான சூழலில்தான் இருந்தது மகாமகக் குளம்.அதையும் மீறி மக்கள் குளத்தில் இறங்கி குளித்தபடி
இருந்தார்கள்.
குளத்தின் கொள்ளளவு 40 ஆயிரம் பேர் என்று கணக்கிடப்பட்டு இருந்தது. ஆனால், அதைவிடப் பல மடங்குக் கூட்டம் குளத்தில் நின்றது. குளத்தில் கால்வாசி பகுதிக்கு மேல் முதல்வரின் பாதுகாப்பு கருதி காவல் துறை வளைத்து நின்றது.
இதனால் நேரம் ஆக ஆகக் குளத்தின் உள்ளே மக்கள் நெருக்கம் அதிகரித்தது.
முதல்வர் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே வந்த தேவாரம் ஐ.ஜி., அடிக்கடி பைனாகுலர் மூலம் மக்கள் அவதிப்படுவதைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். ஆனால், குளத்துக்குக் கூட்டம் வருவதைத் தடுக்க முடியவில்லை.
🌖
சரியாகக் காலை மணி 11.32-க்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த குளியல் அறைப் பகுதிக்கு தோழியுடன் வந்த ஜெயலலிதா படிக்கட்டில் நின்று மக்களைப் பார்த்துக் கையை அசைத்துவிட்டு தான் நீராடப் போகும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் தோழியுடன் இறங்கினார்.
முதல்வர் நீராடத் துவங்கிவிட்டார் என்பதற்கான அடையாளமாக ஐஜி தேவாரம் வானை நோக்கி தன் துப்பாக்கியால் சுட்டான்.
துப்பாக்கியின் தோட்டா வெடித்த சத்தம் கேட்டு மக்களுக்குள் இனம்புரியாத பீதி உண்டானது. ஏதோ அசம்பாவிதம் என நினைத்து அங்குமிங்கும் பதட்டத்துடன் ஓட ஆரம்பித்தனர்.
பயத்தில் ஓடி 'பாங்கூர் தர்மசாலா’ கட்டடத்தின் வெளிப்புறம் இருந்த கிரில் வைத்த கட்டைச் சுவர் மீது ஏற முயல, இரும்பு கிரில் சுவரோடு பெயர்த்துக் கொண்டு சரிந்ததில் அங்கேயே பலர் உடல் நசுங்கி இறந்தனர்.
பொதுமக்கள் மத்தியில் கிரில் விழ.. அந்தப் பகுதி மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாலாபுறமும் திக்குத் தெரியாமல் ஓடினார்கள்.
குளத்தில் இருந்து கரையேறிய மக்களும், சிதறி ஓடிய மக்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். அப்போது வீதிகளில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட நெருக்கடியில் ஆண்களும் பெண்களுமாகப் பல உயிர்கள் நெரிசலில் நசுங்கி பலியாயின.
இந்த களேபரம் எதையும் அறிந்திராத போலீசார்..அலறியடித்துக் கொண்டு ஓடி வரும் மக்களை, நாலாபுரமும் வளைத்து நின்று லத்தியால் விளாச..
மக்கள் கூட்டம் ஸ்தம்பித்து..ஓட வழியில்லாமல் திக்கற்று கீழே விழுந்தும்..நெரிசலில் மிதிபட்டுமென பெரும் எண்ணிக்கையில் பரிதாபமாய் மடிந்தனர்.
மகாமகக் குளப் பகுதியெங்கும் மரண ஓலம். பெருங்குரலெடுத்து அழுகிற சத்தம் ..நாலா திசையிலிருந்தும் வருகிற அலறலும், கேவலும் மயான பூமியை நினைவூட்டியது
🌖
இது ஏதோ திரைப்படத்திற்கான துன்பியல் காட்சியின், திரைக்கதையல்ல தோழர்களே!
நாம் வாழும் காலத்திலேயே நடந்த, அதிகார போதை/மமதையால் நிகழ்த்தப்பட்ட குலைநடுங்க வைக்கிறப் படுகொலைச் சம்பவம்.
மகனைத் தொலைத்த..
மகளைத் தொலைத்த..
அப்பாவைத் தவறவிட்ட..
அம்மாவைக் காணாமல் அலைகிற..
மனைவியை பேர் சொல்லி சொல்லி கதறயபடி தேடுகிற..
கணவரெங்கேயென பெருங்குரலெடுத்து அழுது
தேடி ஓடுகிற .என்று,
எங்கும் அழுகை..அரற்றல்.கதறெலென
கண்ணீர் காடாகிப் போனது மகாமகக் குளம்.
🌖
அங்கு முதல்வருக்கு தோழி சசிகலா 21 குடம் தண்ணீர் மொண்டு குளிப்பாட்ட..பின் தோழிக்கு அதேபோல 21 குடம் நீரெடுத்து குளிப்பாட்டிவிட என உல்லாச நீராடலை முடித்து கிளம்பினர் ஜெயலலிதாவும் ,சசியும்.
கும்பகோணம் மருத்துமனையெங்குமக்களின் உயிரற்ற உடல்களால் நிரம்பியது.
நீராட வந்து..உறவுகளைப் பறிகொடுத்தவர்கள் நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுத சத்தம் எவ்வளவு கொடூர மனம் படைத்தவரையும் அழ வைத்து விடும்.
🌖
இத்தனை உயிர்க் கொலைகளை நிகழ்த்தி விடக் காரணமாயிருந்த முதல்வர் அவர்கள் தரப்பிலிருந்து இதற்காய் மன்னிப்போ..வருத்தமோ..ஆறுதல் வார்த்தையோ ஏதும் வரவில்லை என்பதுதான் கொடூரத்தின் உச்சம்.
நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்களை 40 என்று கணக்கு காட்டியும்..எதிர்ப்பு வந்ததும் 60 என்று சற்று உயர்த்தி காட்டியும் அதிமுக அரசு தன் கடமையை முடித்துக் கொண்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள்..தங்க குடும்ப அங்கத்தினரை இழந்து..தீரா வலியை ..வடுவை நெஞ்சிலேந்தி இன்றளவும் வாழ்கிறார்கள். அந்த அவல நிகழ்வுக்குச் சாட்சியாய்.
🌖
இன்று திமுக தொண்டன் புரோட்டா கடையில் ஏன் குழம்பு தரமற்று இருக்கிறது? என வாடிக்கையாளருக்கு இருக்கும் உரிமையில் கேள்வி எழுப்பினால்கூட..
திமுக அராஜகம் என கொட்டை எழுத்தில் செய்தி போடுவோர்களும்..
சமூக வலைதளங்களில் இஸ்ரேல் உக்ரைன் போருக்கு இணையாக வைத்து புரோட்டாக் கடை சம்பவத்தை விவாதிக்கும் அறிவாளிகள்,
அதிமுக ஆட்சியில்..
தெய்வத்தாய், காவியத்தாய்,கருணை மாதா, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடாத்திவிட்டு வந்த இந்த கோர மரணங்களை கொஞ்சம் திரும்பிப் பார்த்து விட்டு வந்து வாயாடுங்கள் என பணிவுடன் வேண்டுகிறேன்.
🌖
18.02.1992 அன்று கும்பகோணம் மகாமக நிகழ்வில் உயிரிழந்த மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்திட ஒரு நிமிடம் மௌனமாய் நின்று என் வேதனையை மானசீகமாய் அவர்தம் குடும்பத்தினருக்குப் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில்,
ஜெயலலிதாவைவிட , மனிதர்களைப் படுகொலை செய்வதில், பலே கில்லாடிகளான..படு வித்தகர்களான பாஜகவிடம் இன்றைய அதிமுக கைவசப் பட்டிருக்கிறது.
நம்மை..
நம் குடும்பத்தை..
நம் மக்களைக் காக்க, நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை, இந்த வரலாற்றுத் துயர நாளிலே முடிவெடுக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக