வியாழன், 19 பிப்ரவரி, 2026

முடிவெடுத்த ஸ்டாலின்... தலையிட்ட கனிமொழி... திமுக-காங்கிரஸ் கூட்டணி?

 Krithika Tharan :   தூக்கம் வரல.
இன்பாக்சில் ஒரு நட்பு, “ஏன் நாளை துணை முதல்வர் கையால் விருது”ன்னு பரபரன்னு இருக்கிங்களான்னு. இல்லை, 
தமிழ்நாட்டைச் சுற்றி நடக்கும் யூகங்கள் கவலை தருது. என்னதான் தைரியமா பேசினாலும் அடி ஆழத்தில் ஒரு கவலை.
வெளியில் லாபி செய்யும் பலர் எப்படி நம்ப வச்சுருக்காங்க எனில், 
திமுக மிகுந்த பவரில் உள்ளது. அவர்களை அசைக்க முடியாது. இங்கிருந்து பிஜேபியை காலி செய்யணும்னா நம்பர் டூ இடத்துக்கு வரணும். 
அப்ப தவெகுடன் கூட்டணி நல்லது என்று தலையை கழுவி வச்சுருக்காங்க. 
இதை ஒரு சமூக ஆர்வலரே சந்தோஷமா பெங்களூரில் என்னிடம் பகிர, அதிர்ச்சி ஆனேன்.


துரோகம் போன்ற உணர்வுகளை தூக்கிட்டு லாஜிக் யோசிப்போம். 
ஆப்ஷன் 1 – இப்படி நடக்குது. கடைசி நேரத்தில் சிபிஐயை வைத்து காய் நகர்த்தி, காங்கிரஸை அம்போ என்று விட்டால் இரு கட்சிகளும் காணாமல் போகும். அமித் ஷா ஒன்றும் காய் நகர்த்த தெரியாதவரல்ல. முதலை போல அமைதியாக காத்திருந்து மொத்தமாய் லபக் என விழுங்குபவர். அவரைப் பற்றி தமிழ்நாட்டுக்கு அதிகம் அறிவில்லை.
ஆப்ஷன் 2 – நல்ல கூட்டணி அமைஞ்சாச்சு, ஓட்டும் வாங்கிடுவோம்னு வைங்க. பார்லிமெண்டில் ராகுல் காந்தியின் பெயர் சந்தர்ப்பவாத துரோக லிஸ்டில் சேர்க்கப்படும். ஜென்மத்துக்கும் மீட்டு எடுக்க முடியாது. அதெல்லாம் எந்த அறிவாளிக்கும் புரியல. நம்பிக்கைத்தான் காங்கிரஸின் முதலீடு இங்கு. 

அசகாய பணமோ, அதிகாரமோ இன்று இல்லை. மாற்று வேண்டும் என்பவரின் நம்பிக்கைச் சின்னம் ராகுல் காந்தி. அவர் துரோகி எனப் பெயர் வாங்கினால், இந்திய அளவில் பிஜேபியை எதிர்க்கும் ஒரு நல்ல லீடரை மக்கள் மனதில் இழக்கும் வாய்ப்புகள் அதிகம். தி மு க இதை கன கச்சிதமாய் செய்யும். நான் டெக்சாஸ் போனப்ப திமுக வினர் அதிக ஆர்வமுடன் ராகுலை பார்க்க விரும்பினர்.  நாளை உலக அள்வில் கூட டேமேஜ் நடக்கும். 

ஆப்ஷன் 3 – திமுக அசுர பலத்துடன் வந்து மூன்றாம் அணி அமைக்க ஆரம்பித்தால், அகில இந்திய அளவில் காங்கிரஸ் காணாமல் போகும். இதற்குத்தான் பிஜேபி ஆசைப்படுகிறது. சீட்டுக்கட்டை உருவுவது போல் உருவி, இந்தியாவிற்கான பலமான எதிர்க்கட்சியை ஓரளவுக்கு அட்ரஸ் இல்லாமல் ஆக்கிவிடலாம். பின் மிச்சத்தை சமாளிப்பது எளிது. இது பிரித்தாளும் கொள்கையில் களம் கண்டவர்களுக்கு மிக எளிது.
சரி, நாம நினைக்கும் ஆப்ஷனுக்கு வருவோம். காங்கிரஸ்–திமுக கூட்டணி. கண்டிப்பா காங்கிரஸ் வளராது. தமிழகத்தில் வளர இன்னும் பல காலம் உழைக்க வேண்டும். ஆனால் கிராஸ் ரூட்டில் இருந்து உழைப்போம். இருபது வருடத்தில் நம்பர் டூவாக வருவோம். இது கடினம். சோம்பேறிகளுக்கு இது ஒத்து வராது. எல்லாத்திலும் அவசரம், ஆசை — நாளைக்கே என்பதே. இன்னொரு முதுகு என சந்தர்ப்பவாதம்.
ஒருவனை வீழ்த்த, அவனுக்கு அதிக ஆசையை ஊட்டு.
இது விதி.

அந்த விதியின் படி, காங்கிரஸ் மக்களுக்கு ஆசை வலை விரிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு/கோவை பக்கம் சில மக்கள் எத்தனை முறை வீழ்ந்தாலும், திரும்ப ஒரு ஸ்கீம் என்றால் மீண்டும் ஓடுவார்கள். அதுதான் எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வி மாடல். ஒவ்வொரு ஸ்கீமிலும் அதிக அடி வாங்கி, பிஜேபிக்கு வழி செய்வோம். அந்த வலை இப்போதான் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. 
 என்னைப் போன்ற பேட்டர்ன் படிப்பவர்களுக்கு தெளிவாக, ஒவ்வொரு திரையாக விலக்கி விலக்கி பார்க்கும் போது, கோரப்பற்களோடு ஸ்கீம்-லாட்டரியை வைத்துக்கொண்டு விழுங்க இருக்கும் ஒருத்தர் தூண்டிலோடு கண்ணுக்கு தெரிகிறார்.
இந்த உண்மையை எழுதுவதால் எனக்கு நஷ்டமில்லை. ஏனெனில் லாப நோக்கில் நான் காங்கிரசில் இல்லை.
என் நோக்கம் — இந்திய அளவில் ராகுல் காந்தி மேல் மக்கள் வைக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.
இந்தியாவில் காங்கிரஸ் என்றுமே எதிர்கட்சியாக தொடரணும். அது நாட்டுக்கு நல்லது. 
கிர்த்திகா தரன் 
சக்தி இயக்கம்.

கருத்துகள் இல்லை: