வெள்ளி, 22 மே, 2020

துருக்கியில் கொல்லப்பட்ட ஜமால் ..பின்னணியில் சவுதி இளவரசர் ..

hindutamil.in/ : ஜமாலைக் கொன்றவர்களை மன்னிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை: ஜமாலின் தோழி விமர்சனம் என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிடுகிறேன் என்று ஜமால் கஷோகியின் மகன் தெரிவித்ததற்கு ஜமாலின் தோழி கடுமையாக விமர்சித்துள்ளார்.
jamal-khashoggi-s-fiancee-says-no-one-has-right-to-pardon-his-killersஜமால் கஷோகி மகன் சாலா கஷோகிஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜமால் கஷோகியின் மகன்களாகிய நாங்கள் எங்கள் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிடுகிறோம்” என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் ஜமாலின் தோழியான ஹடிஸ் சென்ஜின் கூறும்போது, “ஜமாலைக் கொன்றவர்களை மன்னிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஜமாலின் கொலைக்கு நீதி கிடைக்கும் வரை நானும் மற்றவர்களும் இந்தப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை. அவரைக் கொல்ல கொலையாளிகள் சவுதியிலிருந்து வந்தார்கள். நாங்கள் ஜமாலைக் கொன்றவர்களையும், அவரைக் கொல்ல ஆணையிட்டவர்களையும் மன்னிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்

முன்னதாக, ஜமாலின் கொலை தொடர்பாக அவரது குடும்பத்திற்கு சவுதி அரசாங்கம் இழப்பீடு அளித்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் இந்தத் தகவலை அவரது மகன் சாலா கஷோகி மறுத்திருந்தார்.
ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.
துருக்கியைச் சேர்ந்த ஹடிஸ் சென்ஜினுக்கும் ஜமாலுக்கும் திருமணம் நடக்க இருந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் ஜமால் கொல்லப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்தது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.
மேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகவும் கூறியது. ஜமால் கொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் ஜமாலின் மரணத்தில் சவுதி இளவரசருக்குப் பங்கு இருக்கிறது என்று தெரிவித்தது.

கருத்துகள் இல்லை: