Thapes Vlogger is at Delft Island நெடுந்தீவு. : Jaffna, Sri Lanka
வருங்காலங்களில் நெடுந்தீவில் மக்கள் வாழ்வார்களா..??
நெடுந்தீவில் வருங்காலத்தில் மக்கள் வாழமுடியாமல் வேறு இடங்களுக்கு குடிபெயரலாம்…
எனது காணொளிகளில் நெடுந்தீவின் சுற்றுலா தொடர்பான ஒரு பக்கத்தை மட்டுமே காட்டினேன்..
ஆனால் அங்கு வாழும் மக்களின் நிலை என்ன..??
யாழின் பெருநிலப்பரப்போடு ஒப்பிடும் பொழுது அன்றாட வாழ்க்கை மிகக் கடினமானது..
1970-80 களில் இந்த தீவில் 20-25ஆயிரம் அளவிலான மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால் இப்போது இங்கு வாழ்பவர்கள் வெறும் 3500 அளவிலான மக்களே..
இலங்கையின் பிற இடங்களில் உங்களுக்கு சாதாரணமாக கிடைக்கும் எந்தவொரு சேவையையும் பொருட்களையும் இந்த மக்கள் பெறுவதற்க்கு கடினமாக இருக்கிறது..
யாழ், குறிகட்டுவானிலிருந்து 1 மணிநேர படகுப்பயணம்..
அதுவும் தற்சமயம் ஒரு நாளில் மூன்று முறை தான் இந்த படகுச்சேவை நடைபெறுகிறது.
இந்த தீவில் உள்ள 80%மானவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடி மட்டுமே.
தீவில் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே விவசாயம் செய்ய உகந்த மண் இருக்கிறது.
நல்ல தண்ணீரும் அப்படித்தான், தீவின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமே கிடைக்கின்றது.
இந்த தீவு முழுவதற்க்குமான மின்சாரம், ஒரேயொரு டீசல் மின்பிறப்பாக்கி மூலமே பெறப்படுகிறது தற்சமயம்.
அந்த மக்கள் அடிக்கடி 24 மணிநேரம் கூட மின்சாரம் இல்லாமல் வாழ்கிறார்கள்.
குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும், சிறு அளவிலான கடைகள் இருக்கின்றன..
வாழைப்பழத்தை தவிர உங்களுக்கு வேறு எந்த ஒரு பழமும் அந்த தீவில் வாங்கமுடியாது.
படகு சேவை புறப்படும் நேரங்களில் மட்டுமே, அதாவது ஒரு நாளில் மூன்று தடவை மட்டுமே ஒரு அரச பேரூந்து அந்த தீவை சுற்றி ஓடுகிறது.
கட்டாயமாக உங்களுக்கு தனியாக ஒரு வாகனம் வேண்டும் அங்கு வாழ்வதென்றால்..
ஆனால் அங்கே ஒரு வாகனம் பழுது பார்க்கும் இடம் கூட இல்லை, வாகனத்தில் ஏதாவது பிரச்சனை என்றால், படகில் ஏற்றி யாழ் பெருநிலப்பரப்புக்குத்தான் கொண்டு வரவேண்டும்.
கற்பிணிப்பெண்கள் பிள்ளை பிறப்பதற்க்கு ஒரு சில கிழமைக்கு முன்பே தீவை விட்டு வெளியேறிவிடுகிறார்கள்.
ஒரு சிறுவர் பாடசாலை ஒன்றுக்கு போயிருந்தேன்,
முதலாம், இரண்டாம் ஆண்டில் பிள்ளைகள் யாரும் இல்லை..
மூன்றாம் ஆண்டில் 3 பிள்ளைகள்
நான்காம் ஆண்டில் 3 பிள்ளைகள்
ஐந்தாம் ஆண்டில் ஒரு பிள்ளை மட்டுமே கற்கின்றார்கள்.
இந்த தீவில் வாழ்ந்த பலர், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி ஏற்கனவே இந்த தீவைவிட்டு சென்றுவிட்டார்கள்.
மீதம் இருப்பவர்கள் மீன்பிடி தொழிலை நம்பி இருப்பவர்கள்..
அவர்களும் தலையில் அடித்துக்கொள்கிறார்கள், தமிழ்நாட்டு மீனவர்கள் செய்யும் அட்டூழியங்களால்..
அவர்கள் நெடுந்தீவின் கரை மட்டும் வருகிறார்கள், லட்சங்கள் பெறுமதியான மீன்வலைகளை அறுத்து நாசம் செய்கிறார்கள், எனக்கு பல காணொளிகளை காட்டினார்கள்.
பல போராட்டங்கள், அமைச்சர்களுக்கான கடிதங்கள் அனுப்பியும் தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்கிறார்கள்..
இது தொடர்ந்தால் மீன்பிடியை நம்பி வாழும் மீதமிருக்கும் மக்களும் இந்த தீவை விட்டு வெளியேறுவதை விட தங்களுக்கு வேறு வழிகள் இல்லை என்கிறார்கள்.
ஒரு சுற்றுலாப்பயணியாக மகிழ்ச்சியாக இருந்த நான், அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பார்த்து மனம் சோர்ந்து போய்விட்டேன்.
ஒரு சிறந்த சுற்றுலா தீவாகவும், அங்கு வாழ்கின்ற மக்களின் வாழ்க்கையை ஒரு தரமானதாகவும் மாற்றுவதற்க்கு பல வழிகள் இருக்கின்றன..
ஆனால் அதை யாரும் செய்வார்களா என்பது சந்தேகமே..
ஒரு நாளைக்கு 3 படகுகள் ஓடினாலும், அவர்கள் உள்ளூர் மக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், படகில் ஆட்கள் அதிகமானால் அவர்கள் சுற்றுலாப்பயணிகளை ஏற்றுவதில்லை, தனியாக படகு எடுத்து தீவிற்க்கு வர அவர்களுக்கு அதிக பணம் செலவாகுவதால் அவர்கள் நெடுந்தீவுக்கான தங்கள் பயணங்களை நிறுத்திக்கொள்கிறார்கள்.
சுற்றுலாத்துறையை நம்பியிருக்கும் ஒரு சிலரும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
இன்னும் சொல்வதற்க்கு இருக்கிறது, இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் இந்த நெடுந்தீவு மக்களின் வாழ்வை.
பொறுமையாக இவ்வளவற்றையும் வாசித்த உங்களுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக