செவ்வாய், 24 மார்ச், 2020

அரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப் பார்ப்பனப் பெண் மேடையேறி ஆடினாள்?

Dhinakaran Chelliah : பார்ப்பனியம் எனும் அதிபயங்கர வைரஸ்!!!
சேர, சோழ, பாண்டிய, விஜயநகர அரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப் பார்ப்பனப் பெண் மேடையேறி ஆடினாள்? ஏன் இன்னும் திராவிடர் இசைநாகரீகத்தைக் காட்டும் பெருவங்கியம்(நாதசுரமும்) தவிலும் வாசிக்கப் பார்ப்பனர்கள் முன் வருவதில்லை? இசை வேளாளர் வகுப்புச் சகோதரிகள் ஆடிவந்த சதிர் என்னும் தமிழர் நடனத்தைக் காலனிய ஆட்சி வரலாற்றில் முதல்முறையாகப் பார்ப்பனப் பெண் மேடையேறி ஆடத் தொடங்கினாள்.அதற்கு பரதநாட்டியம் என்று புதுப் பெயர் சூட்டப் பெற்றது.
இருபதாம் பிற்பகுதியிலே வாழுகிற தமிழன் கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும் பார்ப்பனர்களின் கண்டுபிடிப்பு என்றும் காலங்காலமாக அவற்றை அவர்களே வளர்த்தனர் என்றும் நம்புகிறான்.இந்த ஏமாளித்தனத்தை எப்படி மாற்றுவது?!
தஞ்சை நால்வர் என்று அழைக்கப்படும் பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகிய நால்வர்தான் இன்றைய பரதநாட்டிய நிகழ்ச்சிகளின் முன்னோடிகளாவர்.இசை வேளாளர் மரபில் பிறந்த இவர்களின் கலைப் பெரும் பணியினை மறைப்பதற்காகவே, பார்ப்பனர்கள் ‘கர்நாடக மும்மூர்த்திகள்’ என தெலுங்கு கீர்த்தனைகள் பாடிய மூன்று பார்ப்பனர்களை முன்னிறுத்தினர்.முத்துத் தாண்டவர்,
மாரிமுத்தாப்பிள்ளை,சீர்காழி அருணாச்சலக் கவிராயர் ஆகிய தமிழ் இசை ஆசிரியர்கள் மறைக்கப் பட்டனர். தமிழர்களின் கலாச்சார சொத்தைப் பிடுங்கிக் கொண்டு அது பரம்பரையாகத் தங்களுடையதே என்று சாதிக்கும் மேல்சாதி ஏமாற்று வேலை இது.

பார்ப்பனியத்தின் பலமான அம்சங்களில் ஒன்று அவர்கள் தங்கள் சார்பில் பேசப் பார்ப்பனர் அல்லாத அடிமைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுதான்!
தொ.ப அவர்களின் ‘இந்து’ தேசியம் நூலின் சில வரிகள் இவை.

நாமும் பார்ப்பனிய அடிமைகளாக இருக்கிறோம், பார்ப்பனிய கூலிகளாக இருக்கிறோம், பார்ப்பனிய அடியாளாக இருக்கறோம், பார்ப்பனியமாக மாறிப் போனோம், நமக்குள்ளும் பார்ப்பனிய வைரஸ் பரவி வேரூன்றி இருப்பதை அறியாத சூது வாது தெரியாதவர்களுக்கு இப் பதிவு சமர்ப்பணம்!

கருத்துகள் இல்லை: