
அப்போது அவரது வீட்டில் இருந்து சில ஆவணங்களை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பீனியா பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் மோகன் அறை எடுத்து தங்கி இருந்தார். ஆனால் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் அவர் தங்கியிருந்த அறையின் கதவை ஓட்டல் ஊழியர்கள் தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
இதையடுத்து ஜன்னல் வழியாக ஓட்டல் ஊழியர்கள் அறைக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது மோகன் தூக்கில் தொங்கினார். இதுபற்றி ஓட்டல் ஊழியர்கள் கங்கமனகுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் மோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. நிதி நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து கங்கமனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக