வெள்ளி, 27 மார்ச், 2020

ஒரு பார்ப்பனரின் வளர்ச்சி அவரின் சமுகத்துக்கே வளர்ச்சியாகிறது .. ஆனால் ஏனைய ஜாதி தனி நபர்களின் வளர்ச்சியோ ?

Devi Somasundaram : தனி நபரும் பொது சமூகமும் .
ஒரு தனி நபர் வளர்ச்சி, பொது சமூக வளர்ச்சி இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றது. ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதும் ஆகும்.
இது என்ன இரண்டு புறமும் என்று நினைக்கலாம்..ஆம் இரண்டு புறமும் தான்.
ஒரு முதலாளியின் தனிபட்ட வளர்ச்சி முதலாளிவர்க்க நலனை பாதுகாக்கும் வகையில் அது வர்க்க வளர்ச்சியும் ஆகும்..ஆனால் ஒரு தொழிலாளியின் தனிபட்ட வளர்ச்சி வர்க்க பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற வகையில் அது பொது சமூக வளர்ச்சி ஆகாது .
தனி நபர் வளர்ச்சி வர்க்க வளர்ச்சியா இரு வேறு மாறுபட்ட பலனை தருவது ..
இன்னும் தெளிவாக சொல்வதென்றால் ஒரு பிராமணரின் வளர்ச்சி பிராமணிய வளர்ச்சியோடு தொடர்புடையது .. அவர் தனி நபரா தன்னை முன்னிறுத்தி கொள்வதால் அவர் சமூகம் மொத்தமா வ்ளரும் ..
ஆனால் பாப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ( இதில் ஒடுக்கப்பட்ட என்பது பாப்பனரல்லாத மீதி மொத்த சமூகத்தையும் குறிக்கும் ) ஒரு தனி நபரின் வளர்ச்சி ஒடுக்கப்பட்ட சமூக வளர்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை .அதற்கான காரணம் பலவாக இருக்கலாம்
இன்னும் எளிமையா சொல்கிறேன் ..சோ ராமசாமி என்ற தனி நபர் தன்னை முன்னிலைபடுத்தி அதாவது தனி நபரை முன்னிலை படுத்தி செய்யும் அரசியல் அவர் சார்ந்த சமூக வளர்ச்சியோடு தொடர்புடையது ..அதுவே ஒரு ஆதித்தனாரோ, குமார மங்களமோ தன்னை முன்னிலை படுத்தும் போது அது அவர்க்கு மட்டுமான வளர்ச்சியாக மட்டுமே இருக்கும் .

சோ ராமசாமி தன்னை பெரிய ஆளா காட்டிகொள்ள அவர் தான் சார்ந்த கட்சியவே விமர்சித்தாலும் அது அவர் சமூக நலனை பாதிக்காது ..ஆனால் ஒரு தம்பி துரையோ, டீ ஆர் பாலுவோ அப்படி தன்னை முன்னிலைபடுத்தி தன் கட்சியை விமர்சித்தால் அது பொது சமூக நலனை பாதிக்கும் .. அவர்கள் அப்படி தன்னை மட்டும் முன்னிலைப் படுத்தி கொள்வது தன் அமைப்பையே உடைத்து அவர்களையும் வீழ்த்தி விடும் .
சோ , பி ஜே பி மீது வைக்கும் விமர்சனம் பாப்பனியதிற்கு எதிரானதாக ஆகி விடாது .வர்க்க நலன் என்பதை அங்கு சோ மட்டும் முடிவு செய்வதில்லை .சோ வுகாக உழைக்க நம்ம ஆட்களை அவர் தயார் செய்கிறார்னு அர்த்தம் . ஆக சோ வின் பி ஜே பி எதிர்ப்பு ஒரு வகையில் பாப்பனிய ஆதரவு தான் .
ஆனா அ.மார்க்ஸின் திமுக மீதான விமர்சனம் அப்படி அவர் சார்ந்த பொது சமூக நலனை தராது . அது திமுக வை தோற்கடிக்க நினைப்பவர்க்கே பலன் தரும் ..
தென் ஆப்ரிக்காவில் ஒரு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறு பெண் கோர்ட்க்கு முன் கொண்டு வரபட்டாள் ..ஜட்ஜ் அவரிடம் உன் அப்பா உனக்கு போதுமான பாதுகாப்பை தரவில்லையா என்று கேட்டார் ..அந்த பெண் என் பக்க பலவீனத்தை எடுத்து காட்டி நீங்கள் என்னை என் எதிரிகளிடம் பலமற்றவளாக காட்ட முயள்கிறீர்கள் . உங்கள் கேள்வி குற்றவாளியை நோக்கி இருக்க் வேண்டுமே தவிர என் பலவீனத்தை அடையாளப் படுத்துவதாக இருக்கக் கூடாது .என் அப்பா என்னை சரியா பார்த்துகலன்னு காட்டுவதன் மூலம் என்னை இன்னும் பலவீனமானவளாக என் எதிரிகள் முன் சித்தரிப்பது என் பாதுகாப்பை இன்னும் பலவீனப்படுத்தும் அதை ஒரு ஜட்ஜ் செய்யலாமா என்று கேட்டாள்.
கேள்வி ரொம்ப முக்கியம் . நல்ல கேள்வி தான் நல்ல பதிலை பெற்று தரும் ..அல்லது சரியான கேள்வி தான் சரியான பதிலை பெற்றுத் தரும்.. இணையத்தில ஒரு கதை படித்தேன் .ஒரு கல்லூரி கேண்டின்ல தினம் உப்புமா போடப்பட்டது ..70% மக்களுக்கு உப்புமா பிடிக்க வில்லை , 30% மக்களுக்கு உப்புமா பிடித்தது ..70% மக்கள் உப்புமா வேண்டாம் வேறு உணவு போடுங்கள் என்று கேட்டனர், 30% மக்கள் உப்புமாவே வேண்டும் என்றனர் .
கேண்டின் நிர்வாகம் ஓட்டெடுப்பு நடத்தியது . என்ன உணவு வேண்டும்னு பூரி, தோசை, பொங்கல், இட்டலி, சப்பாத்தி, உப்புமா , அனைத்தும் போட்டி போட்டது . 20% மக்கள் பூரிக்கும் , 20% மக்கள் சப்பாத்திக்கும், 10% பொங்கலுக்கும் , 10% இட்லிக்கும் , 10% தோசைக்கும் ஓட்டு போட 30% மக்கள் உப்புமாவுக்கு ஓட்டு போட மற்ற அனைத்தும் தோற்று உப்புமா வெற்றி பெற்று தொடர்ந்து உப்புமாவெ போடப்பட்டது..
ஒரு தவறான கேள்வி பெரும்பான்மை விருப்பத்தை தோற்கடித்து விட்டது .இது தான் அந்த கதை .
.இப்ப ஓட்டெடுப்பு இப்படி இருந்திருந்தால் ..உப்புமா வேண்டும் என்போர், உப்புமா வேண்டாம் என்போர்னு நடந்து இருந்தா தீர்ப்பு மாறி இருக்கும் ..உப்புமா வேண்டாம் என்ற 70% ஓட்டும் வேண்டாம்னு விழுந்திருக்கும் ...
ஆக ஒரு தவறான கேள்வி தவறான பதிலை பெற்று தந்துள்ளது .
தேர்தல பி ஜே பி வேணுமா வேண்டாமான்னு நடத்தி இருந்தா பி ஜே பி தோற்று இருக்கும் ..ஆனா அப்படி நடக்கல பி ஜே பி வேண்டாம்னு விரும்பும் 70% மக்கள் பூரி, தோசை, சப்பாத்தின்னு சிதற அடிக்கப் பட்டதால் 30% மக்கள் விரும்பிய பி ஜே பி ஜெயிச்சுடுச்சு ..
இந்த சிதற அடிக்கபடுவதற்கு பின் யார்லாம் இருக்கா, பி ஜே பிக்கு எதிரா எதிர்ப்பை பிளவு படுத்தும் அத்தனை பேரும் இருக்கின்றனர் . ..ஆப்ஷன்ஸை அதிகபடுத்தும் அத்தனை பேரும் உள்ளனர் ..
காங்கிரஸை விமர்சித்து பிளவு படுத்தியதில் அ.மார்க்ஸின் பங்கு எத்தகையதோ அதே தான் திமுகவுக்கு எதிரான விமர்சனம் தன்னை நல்லவர்னு காட்டிக் கொண்டு பொது சமூக நலனை பாதிப்பதாகும்..
எல்லார்க்கும் நன்றாக தெரியும் அடுத்து திமுக ஆட்சி வரவில்லை என்றால் தமிழகத்தின் இழப்பு மிக மோசமாக இருக்கும் என்று
இந்த சூழலிலும் நான் திமுகவையும் விமர்சிப்பேன் பார் என்ற தன்னை முன்னிலைப் படுத்தும் சோ தனம் யாருக்கு எதிரானது என்பதை அ. மார்க்ஸ் மாதிரியானவர்கள் உணரனும் .
அமைப்பா, தனி நபரா எது முக்கியம் என்பதில் தெளிவு தேவை ..தன்னை முன்னிலைப் படுத்தி தான் பாராட்டப் பட நினைக்கும் விமர்சனங்கள் அமைப்பை பாதிக்கும் ..
இது அ .மார்க்ஸுக்கு மட்டும் இல்லை . அன்பில் மகேஷ் மாதிரி விஷயத்தில் எதிரா தன்னை பெரிய அறிவாளின்னு காட்டிக்க விரும்பிய திமுக உடன்பிறப்புகளுக்கும் பொருந்தும் .

கருத்துகள் இல்லை: