புதன், 25 மார்ச், 2020

இந்தியாவில் சீனா , இத்தாலி அளவிற்கு வேகமாக பரவவில்லயா?

Karthikeyan Fastura : தெரிந்த ஒரு மருத்துவரிடம் பேசியதன் சுருக்கம்
இந்தியாவில் சீனா அளவிற்கோ, இத்தாலி அளவிற்கோ வேகமாக பரவவில்லையே ஏன் ?
" தெரியல. ஆனால் எங்கள் யூகம் பெரியம்மை, தட்டம்மைக்கு ஊசி போடாத ஆட்கள் இந்தியாவில் குறைவு. போலியோவை முற்றிலுமாக துடைத்து எறிந்துவிட்டோம். இந்த தடுப்பூசிகள் நம் உடலின் ஆன்டிபாடி செல்களில் ஒரு ப்ரோக்ராம் எழுதிவைக்கும். அதாவது இப்படியான நோய்கள் பரவினால் அதை தாக்கும் நடைமுறைகள் இவை என. ஒருவேளை அந்த ப்ரோக்ராம் இந்த வைரஸை கொல்லவும் உதவியிருக்கலாம். ஏனென்றால் பெரியம்மையை விட கொடுமையான வியாதி இருக்க முடியாது. அதையே தடுக்கும் போது இது ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது. ஆனால் இதை ஆராய்ச்சி செய்யாமல் உறுதி செய்ய முடியாது. இன்னும் யார் யாருக்கு பாதிக்கப்பட்டதோ அவர்களது சிறுவயது மருத்துவ ரெக்கார்ட் வரை பார்க்க வேண்டியிருக்கிறது. யார் யாருக்கெல்லாம் பாதிப்படைய வாய்ப்பிருந்தும் பாதிக்கவில்லை என்று ஒரு பெரிய டேட்டா சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த டேட்டாவை வைத்து மருத்துவ ஆராய்ச்சி கழகங்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்திய கொரோனா
டேட்டாவிற்காக மருத்துவ உலகமே காத்திருக்கிறது. அது குறைவாக இருக்கும்பட்சத்தில் நமது தடுப்பு ஊசிகள் கொரானாவிற்கும் பொருந்துமா என்று ஆய்வுகள் இருக்கும். தடுப்பூசியை பற்றி வதந்திகள் பரப்பி வரும் ஹீலர் பாஸ்கர் போன்ற அரைகுறைகள் தான் ஆபத்தானவர்கள். நல்லவேளை அரசு அவரை கைது செய்திருக்கிறது" என்றார்.

இந்த கூற்று எந்தளவிற்கு சரி என்று மருத்துவ நண்பர்கள் Sen Balan Selva Prabhu கூறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
50ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட காலமாக நமது அரசுகள் செயல்படுத்திவரும் #தடுப்பூசி நடவடிக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது

கருத்துகள் இல்லை: