சனி, 28 மார்ச், 2020

CAA, NPR, NCR இல் காட்டிய முனைப்பு கொரோனாவில் காட்டவில்லை ..

வளன்பிச்சைவளன் : கண் கெட்ட பிறகு சூரிய நமஸகாரம்  CAA திருத்த சட்டத்தை அமல் படுத்துவதில் பிடிவாதம் காட்டிய  பாஜக அரசு கொரோனா  CAA  போராட்டத்தை  தடுக்க பிரார்தனை மூலம் கொண்டு வந்துள்ளோம் என்கிற கொடூர மனநிலை கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா பற்றி செய்திகள் பிறகு சீனாவில் தீவிர பாதிப்பு என்று செய்திகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிவந்தன.
காற்றில் பரவும் தன்மை கொண்ட இக் கொடிய வைரஸ் பற்றி பாஜக மோடி அரசு பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை அவர்கள் கவனம் இந்துராஷ்டிரம் அமைப்பது.
தங்கள் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற CAA சட்டத்தை தங்கள் எண்ணம் போல் திருத்த அடிமை அதிமுக அரசு, வழக்கிற்கு விலை போன ப மா க அன்புமணி துணை கொண்டு நிறைவேற்றியது.
மக்களை கூறுபோடும் இம்முயற்சியை மாணவர்கள் எதிர்த்து போராட அவர்களை காவல்துறை உதவியுடன் கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து நாடு கிளர்ந்து எழ நாட்டின் பல்வேறு பகுதிகளில் CAA எதிர்ப்பு போராட்டம் உருப்பெற பாஜக தன் கனவு இந்துராஷ்டிர விற்கு எதிரானதாக கருதி ஒடுக்க முயன்றது.
எந்த சூழலிலும் CAA திரும்பப் பெறமாட்டாது என பாஜக அரசு தன் முழு கவனத்தையும் NPR, NCR ஐ அமுல் படுத்துவதில் கண்பட்டை அணிந்த குதிரை போல் ஒரே நோக்கம் என மூர்க்கமாக இந்த CAA எதிர் போராட்ட ங்களை ஒடுக்க மட்டுமே சிந்தித்தது.

கொரோனா இந்தியாவில் தன் கணக்கை துவக்கியது இதனால் மரணங்கள் நிகழ அதைத் தொடர்ந்து பல தலைவர்களின் வேண்டுகோளை அடுத்து CAA எதிர் போராட்ட ங்கள் தற்காலிக மாக நிறுத்தப் பட்டன அப்போதும் இவர்கள் CAA போராட்டம் கொரோனாவால் கைவிடப் பட்டதாக எக்காளமிட்டனர் ஆபத்தை உணரவில்லை இந்துராஷ்டிர வெறி இவர்கள் கண்ணை மறைத்தது.
பாஜக தமிழக தலைவர்கள் CAA போராட்டம் இந்த கொரோனா வரவால் நிறுத்தப்பட்டதை கிண்டல் செய்தனர் உச்சமாக முதல்வர் பழனிச்சாமியின் பிரார்த்தனையால் கொரோனா வந்து CAA போராட்டம் நின்றது என்று கூறும் அளவிற்கு அவர்களது மனநிலை கொடூரமானதாக இருந்தது எப்படியாகிலும் NPR, NCR ஐ அமல்படுத்துவது என்ற முனைப்பு கொரோனா வைப் பற்றி இவர்களை சிந்திக்க விடவில்லை என்பதே உண்மை.
இந்த இரண்டு மாதத்தில் பல்லாயிரம் NRI இந்தியர்கள் இந்தியா வந்தனர், இவர்களை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, சில நாட்கள் தனிமை படுத்தி பிறகு மக்களோடு கலக்க அனுமதித்து இருந்தால் கொரோனாவை இந்தியாவில் கால் பதிக்க விடாமல் செய்து இருக்க முடியும்.
மூர்க்கத்தனமாக CAA அமுல்படுத்த முனைந்து வெளிநாட்டினரை கணக்கில் கொள்ளாமல் அனுமதித்து விட்டு இன்று அவர்களை கண்காணிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு அனுப்புகிறது பாஜக அரசு. இங்கே தொற்றொடு வந்த NRI! இந்தியர்களால் தொற்று எந்த அளவு பரவி உள்ளது என்பது பற்றியும் அரசுக்கு தெரியாது என்பது மிகவும் கவலை அளிக்கிறது.
மூர்க்கர்கள் முன்யோசனை அற்றவர்கள் சிந்திக்க மறுக்கும் கூட்டம் இவ் உண்மைகளை மூடிமறைத்து இது  மாகாமாரி என தெய்வகுற்றம் போல் சித்தரித்து, பாஜக அரசின் அலட்சியத்தை CAA வை அமல்படுத்த காட்டிய மூர்க்கத் தனத்தின் விளைவே என்பதை நாம் மக்களுக்கு தெளிவு படுத்துவோம்.

கருத்துகள் இல்லை: