ஒரு வேளை இந்த உடல் வெப்ப பரிசோதனையின் போது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதில் இருந்து தப்பிக்க, பயணிகள் பலரும், பாராசிடமால் மாத்திரைகளை முன்கூட்டியே போட்டுக்கொண்டு உடல் வெப்பநிலையைக் குறைத்துக் கொள்வது தெரிய வந்துள்ளது.
இது குறித்து தமிழக நல்வாழ்வுத் துறை
அதிகாரிகள் கூறுகையில், பயணிகள் யாரும், அரசு வழங்கும் இடத்தில் தங்களை
தனிமையில் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. அதே சமயம், தங்களை தாங்களே
வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள ஒப்புக் கொள்கிறார்கள் என்கிறார்.
கரோனா பரவலைத் தடுக்க
முன்னெச்சரிக்கையாகவே அரசுகள் இந்த நடவடிக்கையை எடுக்கின்றன. ஆனால், அதில்
இருந்து தப்பிக்க இதுபோன்ற முறைகளை மக்கள் யாரும் கையாள வேண்டாம் என்றும்
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சில பயணிகள் பாராசிடமால் மாத்திரையை சாப்பிட்ட பிறகும், அவர்களுக்கு சராசரியான உடல்வெப்பநிலைதான் இருக்கிறது. அப்படியென்றால், அவர்களது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தது என்பதையே அது காட்டுகிறது. நீங்கள் அதிகாரிகளை ஏமாற்றவில்லை. உங்கள் குடும்பத்தினரை, உறவினர்களை ஏமாற்றப் போகிறீர்கள் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக