zeenews.india.com/tamil :
கொரோனா வைரஸ் வெடிப்பை தொடர்ந்து
அரசாங்கம் விதித்த முழுஅடைப்பு உத்தரவால் இலங்கையில் சிக்கித் தவிக்கும்
16,900 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 2,000-க்கும் மேற்பட்டோர்
இந்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் வெடிப்பை தொடர்ந்து அரசாங்கம் விதித்த முழுஅடைப்பு உத்தரவால் இலங்கையில் சிக்கித் தவிக்கும் 16,900 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 2,000-க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை இலங்கை வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள், அங்கு சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 2,439 பேர் இந்தியர்களே என தெரிவிக்கின்றன. அதேவேளையில் சீனர்கள் 2,167-பேர் சிக்கி தவிக்கின்றனர் எனவும் இலங்கை சுற்றுலா மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக எந்தவொரு நாட்டிலிருந்தும் பட்டய விமானங்களை இங்கு தரையிறக்கவும், விடுமுறை நாட்களில் அல்லது வேலை நோக்கங்களுக்காக நாட்டில் சிக்கித் தவிக்கும் குடிமக்களை வெளியேற்றவும் இலங்கை அனுமதிக்கும் என்று அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதல் உள்வரும் விமானங்களுக்காக இலங்கை தனது சர்வதேச விமான நிலையங்களை மூடியது மற்றும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு மக்கள் வெளிநாட்டு பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டது. எனினும் குறைந்த எண்ணிக்கையிலான வெளிச்செல்லும் விமானங்கள் இன்னும் இயங்குகின்றன. இந்நிலையில் தற்போது உள்நாட்டு விமானங்களை அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இதுவரை 104 உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் 200 க்கும் மேற்பட்ட வழக்குகள் கண்காணிப்பில் உள்ளன.
இலங்கையின் முதல் அறியப்பட்ட COVID-19 ஒரு பெண் சீன சுற்றுலாப் பயணி. அவர் குணமடைந்து இந்த மாத தொடக்கத்தில் புறப்பட்டார். வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட முதல் இலங்கை நாட்டவர் இத்தாலிய சுற்றுலாப் பயணிகளுடன் பணியாற்றிய ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆவார். அவர் குணமாகி இந்த வாரம் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக