வியாழன், 26 மார்ச், 2020

கொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் உயிரிழப்பு .. உலகம் முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை 21,000

Coronavirus: Spain overtakes China in deaths tamil.oneindia.com - mathivanan-maran : மாட்ரிட்: கொரோனா தொற்று நோயால் ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,000 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் கொரோனா தொற்று நோய் 3,285 மனித உயிர்களை விழுங்கியது. இப்போது உலக நாடுகளில் படுவேகமாக பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை குடித்து வருகிறது.
சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலியில்தான் கொரோனாவின் கொடூர தாக்கம் இருந்து வருகிறது. இத்தாலியில் ஒவ்வொரு நாளும் பல நூறு உயிர்கள் பலியாகி வருகின்றன. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 683 பேர் பலியாகினர். இதனையடுத்து இத்தாலியில் மட்டும் உயிரிழப்பு எண்ணிக்கை 7,503 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இத்தாலியைவிட ஸ்பெயினில் திடீரென கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் மரணித்துள்ளனர். மொத்தம் ஸ்பெயினில் 3,434 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளில் சீனாவை விட ஸ்பெயினில் அதிகம். உலகளாவிய அளவில் இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெயினில் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

< இதேபோல் அமெரிக்காவிலும் கொரோனா ருத்ரதாண்டவமாடுகிறது. அமெரிக்கா முழுவதும் நேற்று ஒரே நாளில் 10,000 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் மட்டும் 200 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் மொத்தமாக 60,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் 182 நாடுகளில் மொத்தம் 21,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவும் வேகம் அதிகரிப்பதால் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கருத்துகள் இல்லை: