திங்கள், 23 மார்ச், 2020

`5 மணி; ஓங்கி ஒலித்த சத்தம்; #Corona-வுக்கு எதிரான நீண்டபோரின் முதல் வெற்றி!' - பிரதமர் மோடி


பிரதமர் மோடிசென்னைவிகடன்: இந்த சாலைகள் இவ்வளவு வெறிச்சோடி பார்த்ததில்லை என பலரும் காலையில் இருந்தே சமூகவலைதளங்களில் வீடியோக்களையும், போட்டோக்களையும் பதிவேற்றினர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுய ஊரடங்குக்கு பிரதமர் மோடி இன்று அழைப்பு விடுத்திருந்தார். கொரோனா வைரஸை முன்கூட்டியே கண்டறிவதற்கோ அதற்கு மருந்தோ இல்லை. முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் நம்மை நாம் தற்காத்துகொள்ளலாம்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், `மார்ச் 22-ம் தேதி சுயஊரடங்கை பின்பற்றும் வேளையில் மாலை 5 மணியளவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து நமக்காக சுகாதாரப்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைகளை தட்டுங்கள் இது அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்’ என்றார்.
சுய ஊரடங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்த நிலையில் நேற்று இரவே சந்தைகள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பரபரப்பாக இயங்கும் பல நகரங்கள் இன்று காலையில் வெறிச்சோடின. பிரதமரின் சுய ஊரடங்கு உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர். ஆங்காங்கே ஒரு சிலரை மட்டுமே வீதிகளில் பார்க்க முடிந்தது.


இந்த சாலைகள் இவ்வளவு வெறிச்சோடி பார்த்ததில்லை என பலரும் காலையில் இருந்தே சமூகவலைத்தளங்களில் வீடியோக்களையும், போட்டோக்களையும் பதிவேற்றினர். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மாலை 5 மணிக்கு தங்களது வீட்டின் பால்கனிகளையும், வாசல்களிலும் மக்கள் கூடினர். கைகளைத் தட்டியும், வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டும் சத்தம் எழுப்பினர். சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கைகளைத் தட்டி பலமாக நன்றி தெரிவித்தனர்.




மோடி




மோடி

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ``இது நன்றி செலுத்தும் சத்தம். இது கொரோனாவுக்கு எதிரான நீண்ட போரின் முதல் வெற்றியாகும். இந்த உறுதியைக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான நீண்ட போரில் வெற்றி காண்போம். கொரோனா வைரஸ்-க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நாடு நன்றி தெரிவிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: