திங்கள், 23 மார்ச், 2020

யாழ் வந்த சுவிஸ் போதகருக்கு கொரோனா உறுதி .ஆராதனையில் கலந்துகொண்டோரை தேடும் ராணுவம்

thinakkural.lk :அரியாலை பிலதெல்பியா தேவாலயத்தில் கடந்த 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆராதனையைத் தலைமை தாங்கி நடத்திய சுவிஸ்சர்லாந்து போதகர் போல் சற்குணராஜாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அவரது உதவிப் போதகர் யோசுவா ராஜநேசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் போதகர் பங்கேற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்ட அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திகொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்தவராம் இடம்பெற்ற ஆராதனை ஒன்றில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவறும் பிரதேச சுகாதார அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.

அரியாலையில் உள்ள பிலடெல்பியா தேவாலயத்தில் கடந்த 15 ஆம் திகதி நடந்த ஆராதனைக்கு தலைமை தாங்கிய சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்திருந்த பாதிரியார் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் சுகாதார அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.
இந்த ஆராதனையில் கலந்து கொண்டோர் தாமாக முன்வந்து மருத்துவ அதிகாரிகளை தொடர்பு கொள்ளாத பட்சத்தில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் தேடுதல் நடத்த தீர்மானித்துள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துளளார்.
இந்த ஆராதனையை நடத்திய பாதிரியார் சுவிசுக்கு திரும்பி சென்ற பின்னர் அவருக்கு COVID-19 இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆராதனையில் சுமார் 300 பேர் வரையில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு பேர் ஏற்கனவெ கொரோனா போன்ற அறிகுறிகளுடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் .அ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரசை பரப்பிய அல்லலூயா
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ் வந்து, யாழில் உள்ள மக்களுக்கு கொரோனாவை கொடுத்துவிட்டு மீண்டும் சுவிஸ் சென்று வைத்தியசாலையில் கிடக்கும் ஜோசுவா ராஜநேசன், ஒரு மாபெரும் தில்லாலங்கடி  பேர்வழி என்று, அந்த  நாட்டின் TV அறிவித்துள்ளது. ஆம்… இந்த டிகால்டி சுவிஸ் நாட்டில் ஒரு சேர்சை நடத்திக் கொண்டு மக்களிடம் பணம் பறித்துள்ளார். இலங்கையில் உள்ள ஏழைப் பெண்களை பராமரிக்க என என்று கூறி, சுவிஸ் மக்களிடம் அளவுக்கு அதிகமாக பணம் பறித்துள்ளார் என்று, அன் நாட்டு TV வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
மக்களிடம் ஒரு சிறிய தொகையை அறவிட முடியும் என்றும், ஆனால் இந்த ஜோசுவா ராஜநேசன் சுவிஸ் தமிழ் மக்களிடம் அதி கூடிய பணத்தை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. விண்ணப்ப படிவங்களை ஆச்சடித்து, மக்களிடம் சந்தா முறையில் மாதம் மாதம் பணம் பெற்று வந்ததாகவும். சந்தாவை புதுப்பிக்க மறுத்த தமிழர்கள் மேல் கோபம் கொன்ட ஜோசுவா, உங்களை தேவன் மன்னிக்க மாட்டார் என்று கூறி அவர்களை அச்சுறுத்தி பணியவைத்து. மீண்டும் சந்தாதாரர் ஆக்கியுள்ளார்.

ஆனால் இலங்கையில் இவர் யாருக்கு உதவினார் என்ற விரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் குறித்த TV சேனல், தெரிவித்துள்ளது. இது போக இவர் நோய்களை குணப்படுத்துவதாக கூறும் கும்பலைச் சார்ந்தவர் என்றும். மருந்து மாத்திரை இல்லாமல். நேரடியாக ஆண்டவரின் உதவியோடு நோய்களை குணப்படுத்தியாக கூறி மக்களை ஏமாற்றியுள்ளார். ஏன் எனில் இவரே தற்போது கொரோனா வந்து கொப்புறப்படுத்துள்ளார்.
இந்த நிலையில் இவர் ஏன் யாழ் கிளம்பிச் சென்றார் என்பது பெரும் சந்தேகமாக உள்ளதாக பலர் தெரிவித்துள்ளார்கள். பற்றுச் சீட்டுகளை அச்சடித்து மக்களிடம் பணம் பறித்த இந்த பாதிரியார் மீது சுவிஸ் பொலிசார் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. புனிதமான மதத்தின் பெயரைச் சொல்லி பணத்தை பறித்ததும் இல்லாமல். நோயை பரப்பியும் உள்ளார். கொரோனா என்று தெரிந்த பின்னர் பயணிப்பதும். மற்றவர்களோடு சகஜமாக பழகி நோயை கடத்துவதும், கொலைக் குற்றம் என்பதனை சுவிஸ் அரசு, ஏற்றுக்கொண்டுள்ள நிலையில். இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
இதனை விட இந்த மனுஷன் சிலவேளைகளில் மேடைகளில் பாடுவார். எல்லாத்தையும் தாங்கலாம் அதனை தாங்கவே முடியாது என்று சுவிஸ்சில் வாழும் ஒரு பெண் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார். பாடி பாடி காசை கறந்திருக்கிறார் பாருங்கள்.

கருத்துகள் இல்லை: