செவ்வாய், 24 மார்ச், 2020

மக்களுக்கு எந்த நன்மையும் ஒரு போதும் செய்யாத அரசு .. காப்பறேட்டுக்களுக்கு அள்ளி அள்ளி ...

https://www.businesstoday.in/sectors/energy/coronavirus-in-india-excise-duty-on-petrol-raised-by-rs-18-per-litre-diesel-by-rs-12/story/398989.html?abc&fbclid=IwAR3OZ9uzDoJYeRozFK7XO0aphfdfOoizdnVjryYfXAQSPkkrhTJf4dWHBhs 
Nadhira : மோடி எப்போதும் நம் நாட்டு மக்களின் ரத்தத்தை குடித்தே பழக்கப்பட்டவர்..
கொரோனா அவுட் பிரேக்கால் நம் நாட்டின் பொருளாதாரம் சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.. வேறு வழி இல்லை.. அதனால் மாநிலங்களின் எல்லைகள்.. மாவட்டங்களின் எல்லைகள்.. மாநகரங்களின் எல்லைகள் மூடப் பட்டு வருகின்றன.
ஊரடங்கு உத்தரவுகள் அடுத்தடுத்து பிறப்பிக்கப்படுகின்றன.
வேலைக்குப் போக முடியாது. வருமானம் இல்லை.. உணவுப் பொருட்களுக்கு தடையேதும் இல்லை என்று அரசுகள் சொல்கின்றன.. ஆனால் அரசுகள் சொல்வதை ஒருபோதும் செய்வதே இல்லை என்பது நாம் அறிந்ததே..
நாம் அன்றாடம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறோம்..
இதற்கிடையில் இன்று மட்டும் பங்கு சந்தையில் பத்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நக்கிக் கொண்டு போயாகிவிட்டது.
டாலர் மதிப்பு எழுபத்தாறு ரூபாயை தொட்டுவிட்டது.
இனி பொருட்களின் விலைவாசி தன்னால் ஏறும்.. கையில் பணமும் இல்லாமல், வேலைக்கு போகமுடியாததால் சம்பளமும் இல்லாமல் குடும்பத்தின் ஒரு வேளை சாப்பாட்டுக்கே பாடுபடும் சாமானியன் இந்த விலை ஏற்றத்தை வேறு சந்திக்க வேண்டி இருக்கிறது..
இதற்கிடையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை கடும் சரிவை சந்திக்கிறது.. இன்றைய நிலையில் கச்சா எண்ணையின் விலை ஒரு பேரலுக்கு முப்பது டாலருக்கும் கீழ் போய்விட்டது..
ஏற்கெனவே நாம் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோல் டீசலுக்கு 47 ரூபாய் செலுத்திக் கொண்டிருக்கிறோம்..

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தயாரிப்பு செலவுகள் உட்பட 20 ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. இந்த வரி நாற்பத்தேழு போக மிச்சம் எல்லாம் எண்ணை நிறுவனங்களுக்கான லாபம்.. ஆக நம் ரத்தத்தை உறிஞ்சி எண்ணை நிறுவனங்கள் கொழுத்துக் கொண்டிருக்கின்றன.
பெட்ரோல் விலை வீழ்ச்சியால் உலகெங்கும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபடி இருக்கிறது.
ஆனால் நம் மோடிஜியின் ரத்தவெறி கொண்ட அரசாங்கம் என்ன செய்தது..? பெட்ரோல் டீசல் விலையின் மீதான கலால் வரியை மூன்று ரூபாய் ஏற்றி பெட்ரோல் டீசலை நாம் அதிக விலைக்கு வாங்க வைத்தது.
பொருளாதார நிபுணர்கள் அனைவரும் சொன்னார்கள் :
கச்சா எண்ணை விலை குறைவின் பலனை பொதுமக்களுக்கு கொடுங்கள். பெட்ரோல் டீசல் விலை குறைந்தால் மக்களிடம் பணம் மிச்சப்படும். மிஞ்சும் பணத்தால் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.. இந்த பொருளாதார சரிவு சரியாகும் என்று.
இந்த ரத்த வெறி கொண்ட கார்ப்பரேட் கால் நக்கி மோடி அரசுக்கு அது காதில் விழுமா என்ன.? அதனால்தான் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்காமல் மோடிஜி கூட்டினார்..
அது அப்போ.
இப்போது..?
நாடே கொரோனா அச்சத்திலும் கொரோனாவின் பின் விளைவாக பொருளாதார சரிவிலும் செத்துக் கொண்டிருககிறார்கள்..
இந்த தருணத்தில் பேரிடர் நிவாரண நிதியை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளி வழங்கிவிட்ட மோடி சொந்த நாட்டு மக்களுக்கு ஒத்தை பைசா கூட தர முடியாது. உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று கை விரித்துவிட்டார்.
அது மட்டுமல்ல..
இன்றைக்கு நாடே கொரோனா கொரோன என்று கதறிக் கொண்டிருக்கிறது.. வேலை இல்லை. சென்னையிலிருந்து ஊருக்கு செல்ல பேருந்து இல்லை.. அவ்வளவு அச்சத்திலும் அவதியிலும் பொது மக்கள் செத்துக் கொண்டிக்கிறோம்.
மோடி நம் மக்களுக்கு இன்றைக்கு பரிசளித்திருக்கிறார்.
பெட்ரோல் மீதான கலால் வரியை 18 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 12 ரூபாயுமாக அதிகரித்திருககிறார்.
ஏற்கெனவே மூன்று ரூபாய் அதிகரித்தபோது அரசு வருமான 2000 கோடி அதிகரித்தது. இப்போது இவ்வளவு மலை மாதிரி வரியை அதிகரித்தால் அரசின் வருமானம் எவ்வளவு அதிகரிக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்..
எரிகிற வீட்டில் பிடுங்கித் தின்கிறவன் கொள்ளைக் காரன்..
செத்துக் கொண்டிருப்பவன் வீட்டில் அடித்துப் பிடுங்குபவன் பேர் என்ன..?
இந்த ஈவு இரக்கமே இல்லாத ஒரு நாசமாய் போகிறவனுக்கு சொம்பு தூக்கிக் கொண்டு வருகிறார்களே படுபாவி அரை டவுசர்கள்.
இவர்களை என்ன சொல்ல..?
உண்மையிலேயே கொதித்துப் போயிருக்கிறேன்.
கீழே இந்த விலை ஏற்றத்தைப் பற்றிய பிசினஸ் டுடேயின் செய்தி லிங்க்.
செய்தி உதவி : தோழர் வனிதா ரெஜி..
https://www.businesstoday.in/…/coronavir…/story/398989.html…
Post by நந்தன் ஸ்ரீதரன்

கருத்துகள் இல்லை: