செவ்வாய், 24 மார்ச், 2020

வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை .. புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

Puducherry, Narayanasamy, CoronaVirus, CM, புதுச்சேரி, முதல்வர், சிறைதண்டனை, நாராயணசாமிதினமலர் : புதுச்சேரி: புதுச்சேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாராயணசாமி தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் அவர் பேசியதாவது: பு
துச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். மக்களுக்கு உயிர் பற்றிய கவலையில்லை. இதனை தடுக்க தேவைப்பட்டால் துணை ராணுவத்தினரின் உதவி கோரப்படும்.

அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். நாளை (மார்ச் 25) முதல் மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். அத்தியாவசிய பொருட்களை இன்றே வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். நாளை முதல் யாரும் வெளியே வரவேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்

கருத்துகள் இல்லை: