BBC :மத்திய நிதி
அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செவ்வாய்க்கிழமை) வீடியோ கான்ஃபரசிங்
மூலமாகப் பொருளாதாரம் சார்ந்த சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
கொரோனா
வைரஸ் பொருளாதாரத்தில் செலுத்தி உள்ள தாக்கத்தைச் சமாளிக்க உலக நாடுகள் பல
லட்சம் கோடிகளை ஒதுக்கி உள்ளன. அதிகபட்சமாக அமெரிக்கா ஒரு ட்ரில்லியன்
டாலர்களை ஒதுக்கி உள்ளது, பிரிட்டன் 350 பில்லியன் பவுண்டுகளையும்
அறிவித்துள்ளது.
இப்படியான சூழலில் நிர்மலா சீதாராமன் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்
டெபிட் அட்டை மூலம் எந்த வங்கியின்
ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தாலும் அதற்கு அடுத்த 3 மாதங்களுக்கு கட்டணம்
எதுவும் விதிக்கப்படாது என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
வங்கி கணக்கில் பொதுவாக கடைபிடிக்கப்படும் குறைந்த அளவு கையிருப்பு எதுவும் தற்போது தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இப்படியான சூழலில் நிர்மலா சீதாராமன் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்
- வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவைகளில் சலுகைகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- 2018 - 2019 ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்ய ஜுன் மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
- அதுபோல ஆதார் - பான் அட்டை இணைப்பதற்கான கால அவகாசமும் ஜுன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மார்ச் , ஏப்ரம் மே மாதத்திற்கான ஜி.எஸ். டி தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பொருளாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட மாட்டாது.
- விவாத் சே விஸ்வாஸ் திட்டமும் ஜூன் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- TDS தாமதமாக வைப்பு வைக்கப்பட்டால் 9% வட்டி மட்டும் வசூலிக்கப்படும். ஜூன் 30, 2020 வரையில் இந்த சலுகை. இதில் கால நீட்டிப்பு கிடையாது.
- கொரோனா பாதிப்புக்கான நிவாரண நிதியை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக