தினத்தந்தி :
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் சென்னை, காஞ்சீபுரம்,
ஈரோடு உள்பட இந்தியா முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த முடிவு
செய்யப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும்
விலக்கு அளிக்கப்படும்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மென்பொருள் நிறுவனங் கள், தங்கள் ஊழியர் களை வீடுகளில் இருந்து வேலை செய்ய அனுமதித்து இருக்கின்றன. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.
ஆந்திராவில் ஓடும் பஸ்களும், அங்கிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அந்த மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தா
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மென்பொருள் நிறுவனங் கள், தங்கள் ஊழியர் களை வீடுகளில் இருந்து வேலை செய்ய அனுமதித்து இருக்கின்றன. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.
நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி
வரை பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில்
அண்டை மாநில எல்லைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு, அந்த மாநிலங்களுக்கு பஸ்
போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரெயில்
சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்,
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள 3
மாவட்டங்கள் உள்பட இந்தியா முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைப் படுத்தி
வைக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கி
இருக்கிறது.
பிரதமரின் முதன்மைச் செயலாளர்,
மந்திரி சபை செயலாளர் மற்றும் மாநில தலைமைச் செயலாளர்கள் கலந்து கொண்ட
உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது கொரோனா
வைரசால் உயிர் இழப்பு ஏற்பட்ட அல்லது பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் 80
மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை மட்டும் அனுமதிப்பது தொடர்பாக உரிய
உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அறிவுரை
வழங்கப்பட்டது.
சூழ்நிலைகளை பொறுத்து இந்த
மாவட்டங்களின் எண்ணிக்கையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அதிகரித்துக்
கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்தை 31-ந் தேதி வரை நிறுத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மத்திய
அரசு தெரிவித்துள்ள 75 மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தில் சென்னை,
காஞ்சீபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த
மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து சேவைகளும்
முடக்கப்படும் என்று தெரிகிறது.
மத்திய அரசின்
அறிவுரை குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அடுத்த கட்ட
நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்து இன்று
சட்டசபை கூட்டத்தில் அறிவிப்பார் என்று தெரிகிறது.
கேரளாவில்
திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு,
கோட்டயம், மலப்புரம், பத்தனம்திட்டா, திருச்சூர் ஆகிய 10 மாவட்டங்களும்,
ஆந்திராவில் பிரகாசம், விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களும்,
தெலுங்கானாவில் ஐதராபாத், பத்ராத்ரி கொத்தகூடம், மெட்சாய், ரெங்காரெட்டி,
சங்காரெட்டி ஆகிய 5 மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் புதுச்சேரி மாநிலத்தின் மாகியும் இடம்பெற்று இருக்கிறது.
மத்திய
அரசு அறிவுரையின்படி, டெல்லி இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல்
வருகிற 31-ந் தேதி வரை தனிமைப்படுத்தப்படுவதாக அந்த மாநில முதல்-மந்திரி
கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். இந்த நாட்களில் அரசு பஸ்கள் ஓடாது என்றும்,
அத்தியாவசிய மற்றும் மருத்துவ சேவைகள் மட்டும் வழக்கம் போல் நடைபெறும்
என்றும் அவர் கூறினார்.
கொரோனா பரவுவதை தடுக்க
பீகாரில் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற பகுதிகள்
தனிமைப்படுத்தப்படுவதாக அந்த மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் அறிவித்து
உள்ளார்.
கர்நாடகத்தில் பெங்களூரு நகரம்,
பெங்களூரு புறநகர், மங்களூரு, மைசூரு, கலபுர்கி, தார்வார், சிக்பல்லாபூர்,
குடகு, பெலகாவி ஆகிய 9 மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற
அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் முடக்கப்படுவதாக அந்த மாநில உள்துறை
மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஆந்திராவில் ஓடும் பஸ்களும், அங்கிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அந்த மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக