வியாழன், 26 மார்ச், 2020

மே மாதத்திற்குள் இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ் பாதிப்பு....?

மே மாதத்திற்குள்  இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ் வழக்குகள் வெளிவரக்கூடும்...zeenews.india.com - சிவா முருகேசன் :
புது டெல்லி: உலகெங்கிலும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் பெரும் அழிவை ஏற்படுத்தி  வருகிறது. இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 562 கொரோனா தொற்று  பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இந்த தொற்றுநோயால் 9 பேர் இறந்துள்ளனர். கொரோனாவில் அதிகரித்து வரும் தொற்றுநோயைத் தடுக்க மத்திய-மாநில அரசாங்கத்தால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக நாட்டில் 21 நாள் தனிமைப்படுத்துதல் (Lockdown) அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒருபக்கம் பல தடுப்பு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின் அறிக்கை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மே இரண்டாவது வாரத்தில் 1.3 மில்லியன் கொரோனா வழக்குகள் இந்தியாவில் ஏற்படலாம் என்று கணித்துள்ளது.

மே மாதத்தில் 1.3 மில்லியன் பேருக்கு : அறிக்கை:
இந்தியாவில் கொரோனா (COV-IND-19) வழக்குகளை குறித்து கண்காணித்து வரும்  ஆய்வுக் குழுவின் ஆராய்ச்சியாளர்கள், இந்த அச்சத்தை குறித்து தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இத்தாலி, அமெரிக்கா போன்ற பிற நாடுகளை விட ஆரம்ப கட்டங்களில் கொரோனா வழக்குகளை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இருப்பினும், எங்கள் மதிப்பீடு இந்தியாவில் ஆரம்ப கட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதில் ஒரு சிறப்பு விஷயம் என்னவென்றால், நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள உண்மையான கொரோனோ தொற்று வழக்குகளின் எண்ணிக்கை தெளிவாக இல்லை. இந்தியாவில் மிகக் குறைந்த மதிப்பீட்டு விகிதங்கள் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின் அறிக்கையில் அச்சம்:
இதுவரை, இந்தியாவில் கொரோனாவை பரிசோதித்தவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சரியான மற்றும் விரிவான சோதனைகள் இல்லாததால் சமூக பரிமாற்றத்தின் அளவை தீர்மானிக்க இயலாது. வேறு வார்த்தைகளில் சொல்வது எனில், குறைந்த சோதனை விகிதங்கள் காரணமாக, மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளைத் தவிர இந்த ஆபத்தான வைரஸால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மதிப்பிடுவது மிகவும் கடினம். ஏனென்றால் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட வழக்குகளை உறுதிப்படுத்தல் எனப்து அதன் சோதனையிலிருந்து தெளிவாகிறது
சோதனை விகிதம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன:
ஆரம்ப கட்ட தரவுகளின் அடிப்படையில் நமது தற்போதைய மதிப்பீடுகள் இந்தியாவில் மிகக் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதேபோன்ற ஆரம்ப கட்டங்களில் அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற பிற நாடுகளிலும் காணப்பட்டது. அதன் பின்னர் தான் COVID-19 மிக வேகமாக பரவியது. இந்த நாடுகளில் இருந்து வெளிவந்த புள்ளி விவரங்களே இதற்கு சாட்சி. உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 18,915 பேர் பலியாகி உள்ளனர் மேலும்  4,22,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
<

கருத்துகள் இல்லை: