செவ்வாய், 4 ஏப்ரல், 2017

திமுக ஸ்டெடியாக இன்னொரு அதிமுகவாகி கொண்டிருக்கிறது ? 2 ஆம் கட்ட தலைவர்களை ஒதுக்கும் குடும்ப ஜால்ராக்கள் ! (சபரீசன்?)

திமுகவின் 2-ம் கட்ட தலைவர்களை ஸ்டாலினிடம் இருந்து ஒதுக்கி வைப்பதில் அவரது குடும்ப நபர்களே தீவிரமாக இருக்கின்றனராம். இதனால் சீனியர் தலைவர்கள் கடும் அதிருப்தியில்?
By: Raj சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இருந்து பல சீனியர்கள் ஒதுங்கி செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணமே திமுகவினரால் ஓஎம்ஜி- ஒன்மேன் குரூப் என விமர்சிக்கப்படும் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபர்தானாம். திமுக தலைவர் கருணாநிதி எப்போதும் இரண்டாம் கட்ட தலைவர்களுடனேயே வலம் வருவார்.. அவரது காரிலும் கூட 2-ம் கட்ட தலைவர்கள் பயணிப்பர். மு.க.ஸ்டாலினும் கூட இதே பாணியைத்தான் பின்பற்றி வந்தார். குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம், காட்பாடி சீனியர்கள் ஸ்டாலினுடன் வலம் வருவது வழக்கம். அண்மைக்காலமாக அடுத்தடுத்து இந்த சீனியர்களை ஸ்டாலினுடன் பார்க்க முடிவதில்லை. அதுவும் திருவண்ணாமலைக்காரர் அடுப்பங்கரை அமைச்சரவையிடம் செல்வாக்கு பெற்ற நபர். ஆனால் அவரே ரொம்பவே ஒதுங்கிப் போய்விட்டாராம்.


அதேபோல் விழுப்புரத்துக்காரர் ஸ்டாலினிடன் ஏதோ ஒன்றை விவாதிக்க முயற்சித்திருக்கிறார். அதை தமது குடும்பத்து ஓஎம்ஜியிடம் பேசிவிடுங்களேன் என கூறினாராம் ஸ்டாலின். இதில் விழுப்புரத்துக்காரரும் படுஅப்செட்டாம்.
கலைஞர் கருணாநிதி நலமுடன் இருந்தபோது கூட 2-வது கட்ட தலைவர்கள் சொல்வதை கேட்பார்... அது பிடிக்கவில்லையென்றால் கூட நாசூக்காக கலாய்த்துவிடுவார்... புறக்கணித்தது இல்லை.
திமுகவைப் பொறுத்தவரையில் அதன் பலத்தில் முக்கியமாக இருப்பது இரண்டாம் கட்ட தலைவர்கள்தான். ஆனால் ஜெயலலிதா பாணியில் 2-ம் கட்ட தலைவர்கள் இல்லாத ஒரு நிலையை ஸ்டாலின் குடும்பத்தினர் உருவாக்க முயற்சிக்கிறார்கள்... இது திமுகவின் எதிர்காலத்துக்கு நல்லதே அல்ல என குமுறுகின்றனர் சீனியர் தலைவர்கள்.  tamiloneindia

கருத்துகள் இல்லை: