வெற்றி சங்கமித்ரா
: அருள்மிகு சுவாமி அம்பேத்கருக்கு திருக்கோவில்……
இப்படி வெளிவந்திருக்கும் ஓர் துண்டிறிக்கை பார்த்துவிட்டு மனம் பதறிவிட்டது. அந்த துண்டறிக்கை “அருள்பாலித்தவர் அம்பேத்கர், கடவுள் அம்பேத்கர்,சுவாமி அம்பேத்கர்” என்று அம்பேத்கரை விளிக்கிறது.
எந்த மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து பௌத்தம் தழுவினாரோ அந்த மதத்திடமே அம்பேத்கரை அடமானம் வைக்கத்தான் இந்த செயல் உதவும். தயவுகூர்ந்து அப்படி ஒரு முயற்சியிலிருப்பவர்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள்…..
அம்பேத்கரை நீங்கள் பரப்பவில்லையானாலும் பரவாயில்லை ஆனால், தவறாக பரப்பிவிடாதீர்கள். மன்னிக்கமுடியா வரலாற்று பிழையாகிவிடும். ஒருவேளை அவரை நீங்கள் உயர்த்தி பார்க்க ஆசைப்படுவீர்களேயானால் பௌத்தத்தின் வழி பாருங்கள் அது அவர் கண்ட கனவு அதனுள்ளே இருக்கிறது.
Aadhavan Dheetchanya
அம்பேத்கர் இன்னும் என்னென்ன அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ… கருப்பு கருணா நோட்டீஸ்களை தேடிப்பிடித்ததுடன் அதில் பெயர் இடம் பெற்றுள்ளா பலரையும் விசாரித்திருக்கிறார். தங்களது ஒப்புதல் பெறாமலே நோட்டிசில் பெயர் அச்சிடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
திர்ணாமலையில் யார்யாருக்கோ கோயில் இருக்கும்போது அம்பேத்கருக்கும் ஒரு கோயில் இருக்கட்டுமே என்கிற “நல்லெண்ணத்தில்” இந்த முயற்சி என்று சொல்லப்படுகிறதாம். கடவுள்களுக்கும் கோவில்களுக்கும் எதிரானவர் அம்பேத்கர் என்பதை புரிந்துகொண்டால் இந்த முயற்சியை அவர்கள் கைவிடக்கூடும். அல்லது, இதற்கும் அம்பேத்கருக்கும் தொடர்பில்லை என்று நாம் கடந்துபோக வேண்டியது தான்.

கருப்பு கருணா
இன்று ராமநவமின்னாங்க…அதாம்பா ராமரு பொறந்தநாளாம்.சரி..இன்னிக்கி யாரோடும் வம்புதும்புக்கு போவாம நாமபாட்டுக்கு ராமபஜனை பாடிக்கிட்டிருப்போம்ன்னு நெனச்சி கம்முனு இருந்தால்…இந்த சங்கமித்ரா வெற்றி இந்த நோட்டீசை போட்டு டென்சனை கெளப்பிட்டாப்லய்யா…
சாமி வேணாம்…கோயிலும் வேணாம்…ஒங்க இந்து மதமே வேணாம்…ஆளவிடுங்கடான்னு
தலைமுழுகிட்டு போய்ட்டாரு அம்பேத்கர். அவரையே அருள்மிகு சுவாமி
ஆக்கிப்புட்டு…திருக்கோயில் கட்டப்போறோம்ன்னு விளக்கம்
குடுக்குறானுவோ…இன்னாடான்னு போன்போட்டு விசாரிச்சா…திர்ணாமலையில எம்மாம்
கோயிலு கீது…இவருக்கும் ஒரு கோயிலு இருந்தா இன்னாந்னு மெண்டலாட்டம்
வியாக்கியானம் குடுக்குறானுவோ..! என்னத்த சொல்றது… thetimestamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக