கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால்
பற்றியெரிந்து கொண்டிருக்கும் எம்.வி. டானியேலா என்ற கொள்கலன் கப்பலில்
தீணை அணைப்பதற்கு சிறிலங்கா, இந்தியா கடற்படைகள் மற்றும் இந்திய கடலோரக்
காவல்படை, சிறிலங்கா விமானப்படை என்பன கூட்டாக பெரும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளன.
இலக்கிய,இன்போ
பனாமா கொடியுடன் சென்று கொண்டிருந்த
எம்.வி. டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் தீப்பற்றியிருப்பதாக நேற்று மாலை
சிறிலங்கா கடற்படையிடம் உள்ளூர் முகவரால் அவசர உதவிக் கோரிக்கை
விடுக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக, சிறிலங்கா
கடற்படையின் பி-412, பி-436 ஆகிய அதிவேக தாக்குதல் படகுகள் விரைந்து சென்று
கப்பலில் இருந்த 21 மாலுமிகளையும் மீட்டதுடன், தீணை அணைப்பதற்கான
முயற்சியில் ஈடுபட்டன.
அதையடுத்து, கொழும்பு துறைமுகத்தில்
இருந்து ராவணா மற்றும் மகாவெவ ஆகிய இரண்டு இழுவைப்படகுகள் விரைந்து சென்று
தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன.
எனினும் தீ தொடர்ந்து பரவிக் கொண்டிருந்ததால், சிறிலங்கா கடற்படையினர், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் உதவி கோரினர்.
இதையடுத்து, கொழும்புத் துறைமுகத்துக்கு
நல்லெண்ணப் பயணமாக வந்திருந்த எஸ்சிஜி சூர் என்ன ஆழ்கடல் ரோந்துக் கப்பலை
தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த இந்தியா உத்தரவிட்டது.
அதேவேளை, தென்பகுதி கடலில் ரோந்து
நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் சாகர என்ற ஆழ்கடல்
ரோந்துக் கப்பலும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது. சாகர
மற்றும்சூர் ஆகிய கப்பல்களில் தீயணைப்புக்கான சிறப்பு வசதிகளும், தீயணைப்பு
படையினரும் உள்ளனர்.
மேலதிகமாக, சிறிலங்காவில் ஆய்வுப் பயணமாக
வ்ந்திருந்த ஐஎன்எஸ் தர்ஷக் மற்றும் ஐஎன்எஸ் காரியல் ஆகிய கப்பல்களையும்
இந்தியக் கடற்படை தீயணைப்பு நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளது.
அதேவேளை சிறிலங்கா கடற்படையின் மேலும் மூன்று அதிவேகத் தாக்குதல் படகுகளும், தீயணைப்பு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் சிறிலங்கா விமானப்படையின்
பெல்-212 உலங்குவானூர்தி ஒன்றும், நீரைத் தெளிக்கும் வசதிகளைக் கொண்ட
இராட்சத தொட்டியுடன் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை இந்திய கடலோரக்காவல்படை, செடெக் ரக உலங்கு வானூர்தி ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
சிறிலங்கா, இந்திய கடற்படைகள், சிறிலங்கா
விமானப்படை, இந்திய கடலோரக்காவல்படை, துறைமுக அதிகாரசபை என்பன கூட்டாக
தீயணைப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.
இலக்கிய,இன்போ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக