திங்கள், 3 ஏப்ரல், 2017

ஜம்மு-ஸ்ரீநகர் சுரங்கப்பாதை திறந்து வைத்தார் பிரதமர் மோடி... காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது !


Even as Chenani-Nashri Tunnel is all set to be inaugurated on Sunday by Prime Minister Narendra Modi, the Congress party today sought to take the credit of its construction. District president Congress party Ramban, Arun Singh Raju, in a presser at Dak Bunglow Ramban said the proposal and DPR of the project were approved by the UPA government led by Dr Manmohan Singh in April 2011 and blamed Modi led government for “discriminating against Jammu and Kashmir continuously since it took came to power at the centre
செனானி: ஜம்முவையும், ஸ்ரீநகரையும் இணைக்கும் விதமாக மலையை குடைந்து 9.2 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான  சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் செனானி முதல் நஸ்ரி வரை 9.2 கி.மீ.  தொலைவுக்கு மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் சுமார் ரூ.2,500 கோடி செலவில்  அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி, நேற்று திறந்து வைத்தார். விழாவில், மாநில கவர்னர் என்.என்.ஓரா, முதல்வர் மெகபூபா முப்தி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


சாலையை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, திறந்த ஜீப்பில் பிரதமர் மோடி, கவர்னர் ஓரா, முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் சிறிது தூரத்துக்கு பயணம்  செய்தனர். பின்னர், சுரங்கப்பாதை கட்டமைப்பு பணியில் ஈடுபட்ட இன்ஜினியர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுடன் சேர்ந்து மோடி புகைப்படம் எடுத்துக்  கொண்டார். இந்த சுரங்கப்பாதையின் மூலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் செல்வதற்கான நேரம் சுமார் 2 மணி நேரம் குறையும். 31 கி.மீ. சுற்றிச் செல்வது இந்த  சுரங்கப்பாதையால் தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தினமும் ரூ.27 லட்சத்திற்கான எரிபொருள் சேமிக்கப்படும் என பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பொருளாதாரம், சுற்றுலா துறை வளர்ச்சிக்கு இந்த சுரங்கப்பாதை மிக முக்கியமான காரணமாக அமையும் என்றும்  கூறப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு, மழை போன்றவற்றால்  பாதிக்கப்படாதவாறு, ஆண்டு முழுவதும் அனைத்து சீதோஷ்ண நிலையிலும் உறுதியாக இருக்கும். தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஆட்படாமல் இருக்க பாதுகாப்பு  அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. தீத்தடுப்பு சாதனங்கள், மின்னணு கண்காணிப்பு முறைகள் 150 மீட்டர் இடைவெளியில் பாதை முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன.  இதனால், சுரங்கப்பாதையில் நுழையும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும். பிரதமர் வருகையையொட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

40 ஆண்டு ரத்தம் சிந்தி பயனில்லை

சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், கற்களின் வலிமையை காஷ்மீர் இளைஞர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.  ஒருபக்கம், தவறாக வழிநடத்துபவர்களால் இளைஞர்கள் கற்களை வீசுகின்றனர். மறுபக்கம், இளைஞர்கள் கற்களை உடைத்து, காஷ்மீரின் எதிர்காலத்தை  கட்டமைக்கின்றனர். காஷ்மீர் இளைஞர்கள் முன் இருப்பது 2 பாதைகள். ஒன்று சுற்றுலா, மற்றொன்று தீவிரவாதம். கடந்த 40 ஆண்டாக ஏராளமாக ரத்தம்  சிந்தப்பட்டிருக்கிறது. அதனால் எதுவும் சாதிக்கப்படவில்லை. இனியும் சாதிக்க முடியாது. இந்த 40 ஆண்டில் சுற்றுலாத் துறையில் கவனம் செலுத்தியிருந்தால்,  காஷ்மீர் மாநிலம் சுற்றுலா துறையில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டிருக்கும். ஜம்மு காஷ்மீரை வளர்ச்சியடையச் செய்ய முடியும் என்பதை பாகிஸ்தான்  ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு காட்டுகிறேன் என்றார்  தினகரன்

கருத்துகள் இல்லை: