திங்கள், 3 ஏப்ரல், 2017

தீபா பேரவையின் வசூல் பணம் எங்கே? முளைச்சு முதல் இலைவிட முன்பே வசூல் வசூல் ...

விசாரித்த உண்மை: ""தீபாவின் டிரைவர் ஆயில் ராஜாவின் ஆலோசனைப்படிதான் ‘எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவை’ ஆரம்பிக்கப்பட்டது. 3 லட்சம் அப்ளிகேஷன் ஃபார்முக்கு தலா 10 ரூபாய், ஒரு ஃபார்முக்கு 25 உறுப்பினர்கள் வீதம் 250 ரூபாய்னு கிட்டத்தட்ட 7 கோடிக்கும் மேல வசூலானது. இன்றுவரை பேரவையை ரெஜிஸ்டர் பண்ணவேயில்லை. இதனிடையே ஒ.செ. பதவிக்கு 5, மா.செ. பதவிக்கு 10 லட்சம்னு கலெக்ஷன் பண்ணி, அதிலும் கணிசமான தொகையைக் கப்பம் கட்டினார்கள் மண்டலப் பொறுப்பாளர்கள். இதுபோக மாஜி மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், பணக்காரர்கள் பெரிய அமவுண்டை நிதியாகக் கொடுத்துள்ளார்கள். ""ஒரே வீட்டில் மாடி போர்ஷன்ல சசிகலா கண்ட்ரோலில் இருக்கும் தீபக்கும், கீழ்போர்ஷனில் தீபாவும் இருக்காங்க. தினமும் ராத்திரி 11 மணிக்கு மா.செ. கலைராஜனுடன் தீவிர டிஸ்கஸ் பண்றாரு ஆயில் ராஜா'' என கொட்டித்தீர்க்கிறார்கள் பேரவையினர். நக்கீரன்

கருத்துகள் இல்லை: