மானாமதுரை : மானாமதுரை அருகே காதல் திருமணம் செய்த
பெண் போலீஸ் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே
கட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஷர்மிளாதேவி (25). அதே ஊரை சேர்ந்தவர்
வீரராகவன் (32). இருவரும் காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து
கொண்டனர். இவர்களுக்கு விகாஷ் (3) என்ற மகன் உள்ளார். கோவை ஆயுதப்படையில்
போலீசாக இருந்த ஷர்மிளாதேவி, சில மாதங்களுக்கு முன் புதுக்கோட்டை
ஆயுதப்படைக்கு மாறுதலானார். இவரது கணவர் வீரராகவன் ஒடிசா மாநிலத்தில் ராணுவ
சிப்பாயாக பணியாற்றுகிறார்.
பங்குனி உத்திர திருவிழாவுக்காக சில வாரங்களுக்கு முன் வீரராகவனும், 2 நாட்களுக்கு முன் ஷர்மிளாதேவியும் கட்டிக்குளத்துக்கு வந்தனர். ஷர்மிளா 4 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் திடீரென ஷர்மிளாதேவிக்கு மயக்கம் ஏற்பட்டது. மருத்துவமனையில் ஷர்மிளாதேவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். மகள் சாவில் மர்மம் இருப்பதாக ஷர்மிளாதேவியின் பெற்றோர் மானாமதுரை காவல்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தினகரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக