வறட்சி
நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 24-ஆவது நாளாக டெல்லியில்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கடன் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் பட்டேல் இன்று 6.4.2017 செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் “விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தால் அது கடன் வழங்கும் ஒழுங்கு முறையை பாதிக்கும். மேலும் அத்தகைய கடன் ரத்து என்பது கடன் கொள்கைக்கு எதிரானது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும். அதாவது நடப்பு நிதியாண்டில் முதல் பாதியில் 4.5 சதவீதமும், பிற்பாதியில் 5 சதவீதமும் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருக்கும். மேலும் நேர்மையான முறையில் கடன் பெறுவதை பாதிக்கும் வகையில் இந்த விவசாயக் கடன் ரத்து இருக்கும். நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் வங்கிக்கு திரும்ப வரவில்லை என்றால் வங்கிகள் எப்படி செயல்படும்? கடன் என்பதே திரும்ப செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தானே கொடுக்கப்படுகிறது. அந்த அடிப்படையே தகர்ந்து போனால் வங்கியின் ஸ்திரத்தன்மை சீரழியும்” என்று கூறியிருக்கிறார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக