ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால், பதில் அளிக்க தயாராக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
ஜெயலலிதா மரணம் குறித்து “விசாரணை கமிஷன் அமைத்தால், பதிலளிக்க தயார்”: அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை:
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைக்கு தேர்தல் களத்தில் ஜெயலலிதாவின் மரணத்தை அரசியல் முதலீடாக வைத்து பல அவதூறுகளை ஓ.பன்னீர்செல்வம் பரப்பிவருகிறார்.
மேலும், தனிப்பட்ட முறையில் என்னை அவர் ‘ஆல் ரவுண்டர்’ என்று கூறியிருக்கிறார். அதை நான் ஒத்துக்கொள்கிறேன். ‘ஆல் ரவுண்டராக’ இருப்பது ஒன்றும் தவறு கிடையாது. கிரிக்கெட்டில் ‘ஆல் ரவுண்டராக’ இருப்பவர்களால் தான் பேட்டிங் செய்யவும் முடியும், பந்து வீசவும் முடியும். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் ஒரு ‘மேட்ச் பிக்சர்’. கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களைத்தான் ‘மேட்ச் பிக்சர்’ என்பார்கள். நேற்று (நேற்று முன்தினம்) ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்குமாறு என்னிடம் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததாகவும், அதை நான் மறுத்ததாகவும் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு உலகத்தரத்திலான சிகிச்சை அப்பல்லோ ஆஸ்பத்திரியிலேயே அளிக்கப்பட்டது. எனவே, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை அரசியலாக்கக்கூடாது. மருத்துவ நடைமுறைப்படியே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரது துறைகளையும் சேர்த்து ஓ.பன்னீர்செல்வம் தான் கவனித்தார். முடிவு எடுக்கும் இடத்தில் அவர் இருந்தார். அந்த நேரத்தில், அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் 2 முறை வந்தார். மத்திய மந்திரிகள் வெங்கையாநாயுடு, அருண்ஜெட்லி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரும் வந்தனர். ஏன் அவர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் எதையும் சொல்லவில்லை. இப்போது அபாண்டமாக சொல்கிறார்.
முதல்-அமைச்சராக இருந்தபோது வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டு, இன்று பதவி இல்லாத விரக்தியில் மனக்குழப்பத்தில் இப்படி பேசுகிறார். அதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜெயலலிதாவின் சாதனைகளை வைத்துத்தான் ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்கு வாக்குகள் சேகரிக்கிறோம்.
வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வெற்றி பெற வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால் பதில் அளிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், முதல் குற்றவாளி ஓ.பன்னீர்செல்வம் தான். இவ்வாறு அவர் கூறினார்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால், பதில் அளிக்க தயாராக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். மாலைமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக