வியாழன், 6 ஏப்ரல், 2017

அருந்ததியர் மீதான வெறிதாக்குதல் .... குடும்பத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் வரி வசூலித்து நடத்தப்பட்டதா

thetimestamil : ராஜபாளையம் அருகே கே.தொட்டியப்பட்டி கிராமத்தில் வாழும் அருந்ததியர் மக்கள் மீது ஜாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ள செய்திகள் தொடர்ந்த பல நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது. தலித் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன, குடிசைகளை கொளுத்தப்பட்டுள்ளன, சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, பலர் காயமடைந்து மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பொதுவாகவே இந்த பகுதியில் உள்ள பள்ளியில் அருந்ததியர் வகுப்பைப் சேர்ந்த மாணவ, மாணவிகள்தான் கழிப்பறைகளை சுத்தம் செய்து வருகிறார்கள்.பொது குழாயில் நீர் குடிக்க இயலாது, பிடிக்கவும் இயலாது என்பது தொடங்கி தீண்டாமையில் பல வடிவங்கள் இந்த கிராமத்தில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.


இந்த வன்கொடுமைகளை அங்குள்ள கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் செய்துள்ளனர் என்பது நாம் அறிந்ததே. இதை தற்செயலாக அல்லாமல் மிகுந்த திட்டமிடலுடன் நாயக்கர் சமூகத்தினர் செய்துள்ளனர். குடும்பத்துக்கு தலா ரூ. 2 ஆயிரம் வரி வசூலித்து இந்த வன்முறை வெறியாட்டத்தை திட்டமிட்டு நடத்தியுள்ளனர். இந்த திட்டமிடுதல்களை உற்று நோக்கினால் அவை கயர்லாஞ்சியில் நிகழ்த்தப்பட்ட வன்செயல்களுக்கு கொஞ்சமும் சளைத்வை அல்ல.
பார்ப்பன அடிமைகளாக இருந்து கொண்டு இந்து மதத்தின் மேன்மைகளை தூக்கிபிடிக்கும் ஆதிக்க சாதியினர் இந்த சாதிவெறியை தங்களின் பெருமிதம் பொங்கவே செய்கிறார்கள். இந்த சமூகத்தினருக்கு கிராம கட்டுபாடுகள் எனும் பெயரில் எந்த இழிசேவைகளையும் இனி தலித் மக்கள் செய்யாமல் ஒத்துழாமையில் ஈடுபட வேண்டும். அரசிடம் போராடி தங்களின் உரிமைகளை பெற வேண்டும்.
இந்த பகுதிகளில் பெரும் பகுதி நிலம் அந்த அந்த கிராமத்தின் ஆதிக்க சாதியினர் கைகளில் உள்ளது, தொட்டியபட்டியை பொறுத்தவரை அது நாயக்கர் சமூகத்தினர் கைகளில் தான் உள்ளது. இந்த நிலங்களை அரசு நிலமற்றவர்களுக்கு குறிப்பாக தலித்களுக்கு பிரித்தளிக்காமல் அவர்களின் வாழ்வில் விடுதலையும் சுயமரியாதையும் மலரும் சாத்தியமில்லை.
அரசு என்கிற இந்த கட்டுமானமும் முழுக்க முழுக்க சாதியால் கட்டமைக்கப்பட்டுள்ளது, காவல்துறை தொடங்கி அரசியல் கட்சிகள் வரை இங்கே எல்லாம் சாதி எதிலும் சாதி தான். இந்த கட்டுமானங்களை பெருதும் நம்பாமல் தான் தலித்த விடுதலையை திட்டமிட வேண்டும். தங்களை மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய வழியில் அரசியல் படுத்தியே இந்த இழிவில் இருந்து விடுபட இயலும்.
(மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமும் நாயக்கர் ஆதிக்கமும் என்கிற முழு கட்டுரை விரைவில்)

கருத்துகள் இல்லை: