வெள்ளி, 7 ஏப்ரல், 2017

நடிகன் ரஜினியின் அரசியல் நாடகம் தொடர்கிறது .... பாஜகவின் தேசிய செயற்குழுவில் .. சேரலாம் சேராமலும் விடலாம் ..படம் ஓடணும் இல்ல?


ரஜினி அரசியலுக்கு வருகிறாரா? வந்தால் அவர் எந்தக் கட்சிப் பக்கம் செல்வார்? போன்ற வினாக்களுக்கு விடை தெரியாமல் நடக்கும் ஆடு புலி ஆட்டத்திற்கு, இதுவரை முடிவே தெரியவில்லை. ரஜினியின் புதிய சினிமாக்கள் திரையிடத் தயாராகும் போதெல்லாம் இதுபோல நடக்கும். இது முடிவில்லா நீண்ட கால வரலாறு. இப்போது மீண்டும் ரஜினி உஷ்ணம் வேகமாக அடிக்க ஆரம்பித்துவிட்டது.
ரஜினி, பாஜகவுடன் கைகோர்க்க தயாராகி வருவதாகச் செய்திகள் தீயாகப் பரவி வருகின்றன. இதற்கு அச்சாரம் போடுவது போல பாஜக தரப்பிலிருந்து சிலர் ரஜினியுடன் பேசி வருகிறார்கள். பாஜகவின் தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் ரஜினியுடன் சமீபத்தில் பேசியிருக்கிறார்.

'இப்போது தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பது உண்மைதான். பாஜக தனது செயல்பாடுகளால் இப்போது இந்தியா முழுவதும் பலம் பெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக கால்பதிக்க ஆரம்பித்துவிட்டது. தவிர, அங்கிருக்கும் பல்வேறு முக்கியமான அமைப்புகளும் மோடியை நம்பி களத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில்தான் மக்களின் செல்வாக்கைப் பெற்ற நபர்கள் யாருமில்லை என்பதால் பாஜகவின் சாய்ஸாக நீங்கள்தான் இருக்கிறீர்கள். நீங்கள் இப்போது வேறு கட்சிகளில் இணைந்தாலும், இல்லை புதிய கட்சி ஆரம்பித்தாலும் உங்களுக்குத்தான் தேவையில்லாத ரிஸ்க் அதிகம். தவிர, ஏகப்பட்ட பொருளாதார நெருக்கடிகளும் ஏற்படும். ஆகையால் உங்களுக்கு பாஜகதான் சரியான சாய்ஸ். பாஜகவிற்கு வந்தால் நீங்கள்தான் தமிழக முதல்வர் வேட்பாளர். அதோடுமட்டுமல்லாமல் பாஜகவின் தமிழக தலைவராகவும் உங்களை நியமிக்கவும், நீங்கள் சொல்லும் நபர்களுக்கு பல்வேறு முக்கியப் பதவிகள் கொடுக்கவும் பாஜக தயாராக இருக்கிறது. இறுதியாக வரும் ஏப்ரல் 15ல் புவனேஸ்வரில் பாஜக தேசிய செயற்குழு கூடுகிறது. நீங்கள் எடுக்கும் முடிவை ஒட்டித்தான் தேசிய செயற்குழுவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும். ஆகையால் விரைவில் நல்ல முடிவை எடுங்கள்’ என்று கோரிக்கை வைத்துப் பேசியுள்ளார்.
இதையெல்லாம் பொறுமையாகக் கேட்ட ரஜினி, அவரிடம் பிடி கொடுக்காமல் பேசியிருக்கிறார். ரஜினியின் முடிவு என்னவென்பது சித்திரையில் தெரிந்துவிடும்.  மின்னம்பலம

கருத்துகள் இல்லை: