EXCLUSIVE நக்கீரன் செய்தி எதிரொலி:
தங்கத்தை திருப்பி கொடுத்த எம்.எல்.ஏகள்..
சசிகலாவை ஆதரிக்க எம்எல்ஏக்களுக்கு 4 கிலோ தங்கம் கொடுத்ததை வருமான வரி துறை கண்டுபிடித்து விட்டது என நக்கீரன் செய்தி எழுதியது. வருமானவரிதுறை புலனாய்வு துறை அதிகாரியான தாமோதரன் என்பவர் தான் இந்த தங்க வினியோகத்தை கண்டு பிடித்தார் என பதிவு செய்திருந்தோம்.
இதை படித்த 121 எம்.எல் ஏக்களில் பலர் தங்கத்தை வருமான வரி துறைக்கு பயந்து திருப்பி தருவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தோம். அதை வருமான வரி துறை அதிகாரிகள் உறுதி செய்து டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறார்கள். மொத்தம் 100 அதிமுக எம் எல்ஏக்கள் தங்கத்தை சசிகலா வகையறாக்களிடம் திருப்பி கொடுத்து விட்டார்களாம். போயஸ் கார்டனின் ரகசிய அறைக்கு சென்று சேர்ந்த இந்த தங்கத்திற்க்கு பதிலாக பணம் இதுவரை எம் எல்ஏக்களுக்கு சசிகலாவால் தரப்படவில்லை. அதை நாங்கள் கண் கொத்தி பாம்பு போல கண்காணிக்கிறோம் என வருமான வரி துறை அதிகாரகள் சொல்கிறார்கள்.
-பிரகாஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக