காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்
சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் போராட்டம் நடந்து
வருகிறது. விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு இந்த போராட்டத்தை தலைமை
தாங்கி நடத்தி வருகிறார். தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்
என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்..இன்று கைகளை அறுத்து ரத்தம் சிந்தும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில்
ஈடுபட்டுள்ள விவசாயிகள் கையை, மோடி போன்ற முகமுடி அணிந்த விவசாயி காலில்
ரத்தத்தை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ரிசர்வ் வங்கியை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டுச் சென்றனர். தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், விவசாயிகள் தொடர்ந்து முன்னேறினர். இதனையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் விவசாயிகள் காயமடைந்தனர்.
அத்துடன் விடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.மாலைமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக