கணவர் மற்றும் குழந்தையுடன் ஷ்ருதி பசப்பா
ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான
நிலையத்தில் இந்தியாவை சேர்ந்த பெண்ணின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி
பாதுகாப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியுறவுத்துறை
மந்திரி சுஷ்மா சுவராஜ் விளக்கம் கேட்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவின் பெங்களூர் நகரை சேர்ந்த ஷ்ருதி பசப்பா என்ற பெண் சமீபத்தில்
தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு திடுக்கிடும் தகவலை பதிவு செய்திருந்தார்.
ஐஸ்லாந்து நாட்டில் இருந்து பெங்களூர் நகருக்கு விமானத்தில் வந்தபோது,
கடந்த மாதம் 29-ம் தேதி அமெரிக்காவின் பிராங்பர்ட் விமான நிலையத்தில்
தனக்கு நேர்ந்த அவமானத்தையும், சோகத்தையும் அந்தப் பதிவில் அவர்
குறிப்பிட்டிருந்தார்.
< நான்கு வயது குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்த என்னை பிராங்க்பர்ட் நகர விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மிக மோசமான முறையில் நடத்தினார்கள். தனியறைக்கு அழைத்து சென்று, எனது ஆடைகளை உயர்த்திக் காட்டுமாறும், அவிழ்த்துவிட்டு நிற்குமாறும் வற்புறுத்தினார்கள். ஒவ்வொரு முறையும் இதுபோன்ற பரிசோதனைக்கும் அதுதொடர்பான மன உளைச்சலுக்கும் நான் இலக்காக நேர்கிறது என்று ஷ்ருதி பசப்பா வேதனையுடன் தெரிவித்திருந்தார்.< இந்த பதிவு பல பகிர்வுகளின் மூலம் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் கவனத்துக்கு சென்றது. இதுதொடர்பாக கவலை தெரிவித்துள்ள அவர், இச்சம்பவம் தொடர்பான உண்மை நிலவரம் குறித்து விசாரித்து தனக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு பிராங்க்பர்ட் நகரில் உள்ள இந்திய தூதர் ரவீஷ் குமார் என்பவருக்கு உத்தரவிட்டுள்ளார். மாலைமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக