சனி, 8 ஏப்ரல், 2017

சிரியா மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல் ..


வாஷிங்டன்: சிரியாவில் பொதுமக்கள் மீது விஷவாயு தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக சிரியா விமானப்படை தளம் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசியது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக 2011 மார்ச் முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இப்போரால் இதுவரை குறைந்தது 3.5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 76 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இந்தப் போரில் சிரிய அதிபருக்கு ஆதரவான படைகள் ரசாயன ஆயுத தாக்குதலில் அவ்வப்போது ஈடுபடுவதாக சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்படுகிறது.
சிரியா எதிர்க்கட்சிகளும் இந்த குற்றச்சாட்டை கூறுகின்றன. ஆனால் இதை சிரியா மறுத்து வருகிறது. இந்த நிலையில், அங்கு இத்லிப் மாகாணம், கான் ஷேக்குன் நகரில் போர் விமானங்கள் விஷ வாயு தாக்குதல் நடத்தின.
இந்த விஷ வாயு தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கு சிரியா மற்றும் ரஷ்ய ராணுவம் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது, ஆனால் இரு தரப்பு மறுப்பு
தெரிவிக்கிறது.
சிரியா அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதை ரஷ்யா மறு ஆய்வு செய்ய வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்கள் மீது விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சிரியாவே முழு பொறுப்பு, என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிஉள்ளார்.
சிரிய ராணுவத்தின் போக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் மத்திய தரைக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்க்கப்பல்களில் இருந்து 60 ஏவுகணைகளை , விஷகுண்டு தாக்குதல் நடத்திய சாய்ரத் விமானப்படை தளத்தின் மீது வீசியது. இத்தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் வெயிடப்படவில்லை. சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அங்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தியது இல்லை. தற்போது முதன் முறையாக தாக்குதல் நடத்தப்
பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரான பிறகு டிரம்ப் சிரியா மீது
தாக்குதல் நடத்தும் படி முதன் முறையாக கையெழுத்திட்டுள்ளார். இதை அவரே வெளியிட்டுள்ளார்.
நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஷவாயு தாக்குதலை கண்டித்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீன அதிபர் ஜின்பிங் தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
புளோரிடாவில் இவர்கள் இருவரும் சந்தித்தனர். அப்போது சிரியா மீதான தாக்குதல் உத்தரவை டிரம்ப் பிறப்பித்தார். முன்னதாக இத்தகவல் சிரியாவின் நட்பு நாடான ரஷ்யாவுக்கும் தெரிவிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் நடவடிக்கையை சிரியா ஆக்கிரமிப்பு செயல் என குற்றம் சாட்டிஉள்ளது.
விஷவாயு தாக்குதல் மற்றும் அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் பிரதமர் அமெரிக்காவின் நடவடிக்கையை
வரவேற்று உள்ளார். dinamalar

கருத்துகள் இல்லை: