வியாழன், 6 ஏப்ரல், 2017

இரகசியமாக மன்னிப்பு கேட்ட ஹெச் .ராஜா .. போட்டுடைத்த அய்யாக்கண்ணு ..


பாஜகவின் எச்.ராஜா சமீபத்தில் தொலைப்பேசி உரையாடல் ஒன்றில் விவசாயிகளுக்காக டெல்லியில் போராடும் அய்யாக்கண்ணு பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதில், அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருக்கிறார், அவர் ஒரு பிராடு, அவரை கடந்த 25 வருடமாக தெரியும், எனது வீட்டு வாசலில் வந்து கிடப்பார் என தரம் தாழ்ந்து பேசினார். இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக அய்யாக்கண்ணு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எச்.ராஜா தன் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து அவருக்கு போன் செய்து கேட்டதாக கூறினார். எப்ப சார் நான் உங்க வீட்ல வந்து இருந்தேன், நான் என்ன ஃபிராடு தனம் சார் செய்தேன் எனக் கேட்டேன் அதற்கு ராஜா சாரி அது தெரியாம நடந்து போச்சு நான் வேனா வருத்தம் தெரிவித்து அறிக்கை விடுகின்றேன் என தன்னிடம் கூறியதாக அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.


மேலும் எச்.ராஜாவுக்கு அய்யாக்கண்ணு பகிரங்கமாக சவால் ஒன்றை எடுத்துள்ளார். என் மீது எச்.ராஜா கூறிய குற்றச்சட்டை அவர் நிரூபித்தால் நான் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய தயார். இல்லையென்றால் அவர் தூக்கில் தொங்குவாரா என சவால் விட்டார். இதை நான் எச்.ராஜாவுக்கு சவாலாக விடுகிறேன், அவர் ஆம்பளயா இருந்தா இந்த சாவலை ஏற்க வேண்டும் என அய்யக்கண்ணு அந்த காணொளியில் பேசியுள்ளார்  வெப்துனியா

கருத்துகள் இல்லை: