வெள்ளி, 7 ஏப்ரல், 2017

ஜியோ இலவச சலுகை ரத்து! டிராய் உத்தரவாம்!


மூன்று மாதம் இலவசம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 'சம்மர் சர்ப்ரைஸ்' சிறப்புச் சலுகை திட்டத்தை டிராய் உத்தரவின்பேரில் திரும்பப் பெறுவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதியோடு ஜியோவின் இலவச சேவை முடிவுக்கு வரவிருந்த நிலையில், ஜியோ பிரைம் திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசத்தை மேலும் 15 நாட்கள் நீட்டிப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஜியோ பிரைம் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்றும், ரூ.303 கட்டணம் செலுத்தினால் ஜுன் வரையிலான மூன்று மாதங்களுக்கு இலவசங்கள் நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திட்டத்தை நிறுத்தும்படி தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் உத்தரவிட்டதன்பேரில், ’சம்மர் சர்ப்ரைஸ்’ என்ற இந்த 3 மாதச் சலுகை அறிவிப்பை உடனடியாக ரத்து செய்வதாக தற்போது ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோவின் இந்த அறிவிப்பால் அதன் வாடிக்கையாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
எனினும், ரூ. 99க்கு ரீசார்ஜ் செய்வதற்கான காலக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லை. ஏப்ரல் 15ஆம் தேதி வரையில் கட்டணம் செலுத்தி பிரைம் உறுப்பினர்களாக இணைந்துகொள்ளலாம். மேலும் முதலில் அறிவித்திருந்தபடி பழைய திட்டம் தொடரும். சம்மர் சர்ப்ரைஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏற்கனவே ரீசார்ஜ் செய்தவர்களுக்கு மூன்று மாத இலவசம் கிடைக்காது. அதனால் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்குத் தினமும் 1 ஜி.பி. டேட்டா மட்டுமே கிடைக்கும். அதேபோல, 499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா கிடைக்கும். இதேபோல, பிற திட்டங்களும் ஏற்கனவே அறிவித்திருந்தபடி வழங்கப்படும் என்று ஜியோ அறிவித்துள்ளது  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: