Flashback: சிவனடியார் ஆறுமுகசாமி போராட்டம் ! சிதம்பரம் நடராஜர் கோவில் மக்கள் சொத்து ! அரசுக்கே உரிமை ! தீட்சிதர்களுக்கு அல்ல ~!
தமிழக அரசே,
தில்லைக் கோயிலை தீட்சிதர் சொத்தாக்க முயலும்
சுப்பிரமணிய சாமியின் சதிக்கு துணைபோகாதே!
நாளை நடக்கும் உச்ச நீதிமன்ற வழக்கில்
திறமையான வழக்குரைஞர்களை நியமித்து
தில்லைக் கோயில் மக்கள் சொத்துதான் என்று நிறுவு!
சிற்றம்பல மேடையில் தமிழ் பாடும் உரிமையை நிலை நாட்டு!
“கோரிக்கை நிறைவேற
சிற்றம்பல மேடையில்
தேவாரம் பாடியபடியே உயிர்துறப்பேன்”
- ஆறுமுகசாமி
சிவனடியார், குமுடிமுலை, சிதம்பரம்
இன்று 2.12.2013 காலையிலிருந்து தில்லைக் கோவிலை தீட்சிதர்களிடமிருந்து காப்பாற்றக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி சிவனடியார் ஆறுமுகசாமி, மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களுடன் திருச்சிற்றம்பல மேடையில் போராடி வந்தார்.
ஏராளமான போலிசு கோவிலுக்கு வெளியேயும், உள்ளேயும் குவிக்கப்பட்டிருந்தது. மதியம் 12.00 மணிக்கு கோவில் நடையை பூட்ட
வேண்டும் என்று தீட்சிதர்கள் அவரை வெளியேற்ற முயன்றதை மறுத்து போராட்டம் தொடர்ந்தது.
அப்படி கோவில் பூட்டப்படவில்லை என்றால் அது ஆகமவிதிக்கு முரணானது என்று போலீசை அழைத்து வந்தார்கள் தீட்சிதர்கள். இறுதியில் மதியம் 2.30 மணி அளவில் சிவனடியார் ஆறுமுகசாமி மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டு முப்பது பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். போராட்டக் காட்சிகளின் சில பதிவுகளை இங்கே புகைப்படங்களாக வெளியிட்டிருக்கிறோம். vinavu,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக