புதுடில்லி:அமெரிக்காவைத் தொடர்ந்து, பிரிட்டன், சிங்கப்பூர்
உள்ளிட்ட நாடுகளும், விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு
வந்துள்ளன. இதனால், அங்கு வேலைக்கு ஊழியர்களை அனுப்பும் இந்திய
நிறுவனங்களுக்கும், வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களின் கனவிலும்,
அடி மேல் அடி விழுந்துள்ளது.
அமெரிக்கா,
பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம்,
கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட நுட்பமான தொழில்களில்,
இந்தியர்களே அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இந்திய, ஐ.டி.,
நிறுவனங்களும், இந்த நாடுகளில் தங்கள் கிளைகளை துவக்கி, இங்கிருந்து
இந்தியர்களை வேலைக்கு அனுப்பி வருகிறது.
அமெரிக்காவின் புதிய
அதிபராக பதவியேற்ற, பிரபல தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், 'அமெரிக்கா,
அமெரிக்கர்களுக்கே' என்ற கோஷத்துடன், அமெரிக்கர்களுக்கு வேலைகளில்
முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.
அதன்படி, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டுக்கு வேலைக்கு வருவதற்காக வழங்கப்படும், 'எச் - 1பி' விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்.
இந்தக் கட்டுப்பாடுகள், அமெரிக்காவுக்கு செல்லும் கனவில் இருந்த இந்திய இளைஞர் களுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் பெரும் அடியாக இருந்தது.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனி லும், ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து வேலைக்கு வருவோருக்கு வழங்கப்படும் விசாவில், கடும் கட்டுப்பாடுகள், நாளை முதல் அமலுக்கு

பிரிட்டனிலும் ஆரம்பம்
இந்த நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனி லும், ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து வேலைக்கு வருவோருக்கு வழங்கப்படும் விசாவில், கடும் கட்டுப்பாடுகள், நாளை முதல் அமலுக்கு
வருகின்றன.இந்த புதிய
கட்டுப்பாடுகளின்படி, பிரிட்டனில் வேலை கேட்டு விசா கோருபவர் கள்,
பிரிட்டனின் தொழிற்பயிற்சிக்காக ஆண்டுக் கட்ட ணமாக, 80 ஆயிரம் ரூபாயை
செலுத்த வேண்டும். மருத்துவ திட்டங் களுக்காக ஆண்டு கட்டணமாக, 16 ஆயிரம்
ரூபாயை செலுத்த வேண்டும். இது ஒவ்வொரு ஊழியருக்கும், அவரது
குடும்பத்தாருக்கும் தனித் தனியாக செலுத்த வேண்டும்.
இதன் மூலம், விசாவுக்கான செலவுகள் அதிகரிப் பதால்,விசா கோருவது குறையும் என்பதே பிரிட்ட னின் திட்டம். மேலும் வசூலிக்கப்படும் தொழிற் பயிற்சி கட்டணம் மூலம், பிரிட்டனைச் சேர்ந்த வர்களுக்கு, தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த கட்ட ணங்களை, இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள், பிரிட்டனில் உள்ள தங்களின் கிளைகளுக்கு, இந்தியாவில் இருந்து ஆட்களை அனுப்பும்போதும் செலுத்த வேண்டும். இதைத் தவிர, வெளிநாட்டு ஊழியர்களான சம்பளத்தை நிர்ணயிப்பதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.
'பிரெக்சிட்' எனப்படும், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பணிகளில், பிரிட்டன் ஈடு பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, நாட்டின் பொருளா தாரத்தை மேம்படுத்தவும், தடையில்லா வர்த்தகத் துக்கும், பிரிட்டன் பெரிதும் நம்புவது இந்தியா வையே. அதனால்தான், பிரிட்டனின் பிரதமராக, தெரசா மே பதவியேற்றதும், முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வந்தார்.
இந்தியர்களுக்கு அதிக அளவில் விசா வழங்க வேண்டும் என்பதே, இந்தியத் தரப்பில் வைக்கப் பட்டுள்ள முக்கிய கோரிக்கை. இந்த நிலையில், இந்த புதிய கட்டுப்பாடுகளை பிரிட்டன் கொண்டு வந்துள்ளது, இந்திய தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை குறைத்து கொள்வதை, சிங்கப்பூரும் துவக்கி யுள்ளது.இது குறித்து, 'நாஸ்காம்' எனப்படும் இந்திய கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங் களின் கூட்டமைப்பு தலைவர் ஆர்.சந்திரசேகர் கூறியதாவது:கடந்த, 2016, ஜனவரி முதலே, இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு, வேலைக்கான விசா வழங்குவதை சிங்கப்பூர் நிறுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து, ஏற்கனவே வழங்கியுள்ள விசாக்களையும் நீட்டிக்காது;
இது, சிங்கப்பூரில் கிளைகளை துவக்கியுள்ள, இந்திய ஐ.டி., நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், மிகவும் கடுமையான விசா நடைமுறைகளையும் சிங்கப்பூர் கொண்டு வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க மக்கள் உரிமை பிரிவு நிர்வாகி, டாம் வீலர் கூறியதாவது:
எச் 1- பி விசா விதிமுறைகளை மீறி, பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை, அமெரிக்க நிறு வனங்கள் பணி அமர்த்தி வருகின்றன. இதனால், உள்ளூர் பணியாளர்கள் பாதிக்கப் படுகின்றனர். எச் 1 - பி, விசா விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.அதுபோலவே, அமெரிக் காவில் உள்ள நிறுவனங்கள், வேலைக்கு நபர் களை சேர்க்கும் போது, தகுதியான அமெரிக்கர் கள் இருந்தால் அவர்களை நிராகரிக்க கூடாது; சம்பளம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக, அவர்களுக்கு பணி வழங்க தயங்க கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'கம்ப்யூட்டர் புரோகிராமர்களை சிறப்பு தகுதி வாய்ந்த பணியாளர்களாக கருத முடியாது. எச் 1- பி விசா விதிமுறைகளை மீறி, அவர்களை, சிறப்பு தகுதி வாய்ந்த பணியாளர்கள் என கூறி, ஐ.டி., நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு அழைத்து வருகின்றன; அந்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமெரிக்க குடியேற்ற பணிகள் துறை எச்சரித்துள்ளது. தினமலர்

தடையில்லா வர்த்தகம்

சிங்கப்பூரிலும் 'செக்'

அமெரிக்கா எச்சரிக்கை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக