வியாழன், 6 ஏப்ரல், 2017

திமுக ஸ்டாலின் பாமக பாலு சந்திப்பு ... மதுவுக்காக நெடுஞ்சாலைகள் மாவட்ட சாலைகளாக பெயர் மாற்றம்?

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், பா.ம.க வழக்கறிஞர் பாலு இன்று நேரில் சந்தித்து பேசினார். பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் உடன் சென்றிருந்தார். மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பா.ம.க சார்பாக வழக்கு தொடர்ந்து வெற்றி கண்டு உள்ள உத்தரவு தொடர்பாக கடிதத்தை பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இராமதாஸ் எம்.பி ஆகியோரின் அறிவுருத்தலின்படி கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலு, உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள சுமார் 3300 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த கடைகளை மூடாமல் தொடர்ந்து செயல்படுத்த மாநில நெடுஞ்சாலையை மாவட்ட சாலை என்று பெயர் மாற்ற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. தமிழக அரசின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க சார்பில் அழைப்பு விடுத்திருப்பதாக பாலு தெரிவித்தார்.  நக்கீரன்


கருத்துகள் இல்லை: