புதன், 5 ஏப்ரல், 2017

அமெரிக்க லேப்டாப் தடையால் ஏர் இந்தியா டிக்கெட் விற்பனை நூறு வீதம் உயர்ந்தது


எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தடைவிதிக்கப்பட்ட முதல் வாரத்தில், ஏர் இந்தியாவின் டிக்கெட் விற்பனை நூறு சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் தடையால் நூறு சதவீதம் உயர்ந்த ஏர் இந்தியா டிக்கெட் விற்பனை புதுடெல்லி: எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு கடந்த மாதம் தடை விதித்தது. மொபைல்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.


 வளைகுடா நாடுகளான எகிப்து, ஜோர்டான், குவைத், மொராக்கோ, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலிருந்து மேற்சொன்ன பொருட்களை எடுத்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, அமெரிக்கா அரசு அறிவித்த இதே திட்டத்தை பிரிட்டன் அரசும் அமல்படுத்தியது. துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிசியா, சவூதி அரேபியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டனுக்கு வரும் போது விமானங்களில் லேப்டாப், டேப்லட், ஐ-பேடு போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து வர பிரிட்டன் தடை விதித்தது.
இந்நிலையில், எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தடைவிதிக்கப்பட்ட முதல் வாரத்தில், ஏர் இந்தியாவின் டிக்கெட் விற்பனை நூறு சதவீதம் உயர்ந்துள்ளது.
 வழக்கமாக கடந்த ஆண்டு முழுவதும் நாள் ஒன்றின்றிற்கு அமெரிக்காவிற்கு 150 டிக்கெட்டுகள் தான் விற்பனையாகும், ஆனால் தடை அமல் செய்யப்பட்ட மார்ச் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நாள் ஒன்றிற்கு 300 டிக்கெட்டுகள் விற்பனையாவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அமெரிக்காவில் இருந்து இந்தியா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அதேபோல், இரண்டாவது வாரத்தில் டிக்கெட் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது. நாள்தோறும் 220 டிக்கெட்டுகள் வீதம் விற்பனையாகிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க், நிவர்க், சிகாகோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய 4 இடங்களுக்கு புதுடெல்லி, மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து விமான போக்குவரத்து உள்ளது

கருத்துகள் இல்லை: