தமிழக விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும்
மேலாக டெல்லியில் பல்வேறு நூதன போராட்டங்களை செய்து வருகின்றனர். ஆனால்
இந்த போராட்டங்களை சர்க்கஸ் போல ரசித்து பார்த்து வரும் மத்திய அரசு
அவர்களுடைய கோரிக்கைகளை பரிசீலனை செய்யக்கூட மறுத்து வருகிறது.வங்கிக்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம்
உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு
டெல்லியிலும், இந்தியாவின் மற்ற பகுதியில் இருந்தும், வாழ்த்துக்களும்
ஆதரவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள சரவண பவன் கிளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
விவசாயிகள் அனைவருக்கும் மதிய உணவை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த தகவலை
சரவண பவனின் பணிபுரியும் செஃப் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
உலகிற்கே சோறு போடும் விவசாயிகளுக்கு சோறு போடும் சரவண பவனை வாழ்த்துவோம்.வெப்துனியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக