நகர்ப்புற வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 5ஆம் தேதி மாநில நகர்புற வறுமை ஒழிப்பு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி-பதில் நேரத்தில் ஒரு உறுப்பினரின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, 'நகர்புற வறுமை ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. மேலும் சுய உதவிக்குழுக்கள் போன்ற திட்டங்கள் மூலம் உதவிபுரிவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக 24 ஆயிரத்து 245 சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அதில் 30 ஆயிரத்து 258 பேருக்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக