செவ்வாய், 4 ஏப்ரல், 2017

சில தற்குறிகள்.. முட்டுச்சந்தில் நின்றுகொண்டு திராவிடத்தை ஒழிப்போம்..

சென்னை தாமோதரன் : ஆரியர்கள்...தமிழுக்கு இட்ட பெயர் திராவிட பாஷா
இப்போதும் கூட தெலுங்கர்கள்...தமிழை " அரவமு"...
என்றுதான் சொல்வார்கள்.
தமிழை அவர்கள் வெவ்வேறு பெயர்களில் அழைத்து வந்தார்கள்..
தெலுங்கு 11 ம் நூற்றாண்டில்தான் தமிழிலிருந்து கிளை பிரிந்தது
அதன் பிறகு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகள் தோன்றின..

தற்காலத்தில் ...கொங்கு தமிழ் நெல்லை தமிழ் குமாரி தமிழ் தஞ்சை தமிழ் சென்னை தமிழ் என்று இருப்பது போல...
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு....
தமிழின் வட்டார மொழிகளாக அரும்பியவைதான் ...தெலுகு கன்னடம் மலையாளம்
தெலுங்கு கன்னடம் மலையாளம் என்பவை புது தனி மொழிகள் அல்ல ..அவை தமிழின் கிளைகள்.
இந்த உண்மைகளை....
இலக்கியத்தில்...ஒப்பிலக்கியம் ஒப்பிலக்கணம் படித்தால் தெரிந்துகொள்ளலாம்..
ஆதலால் தமிழ் வேறு திராவிடம் வேறு அல்ல
தமிழே திராவிடம்...

தண்ணீர் வேறு ஜலம் வேறு அல்ல.
நம் நிலப்பரப்பை ஆங்கிலேயர்கள் இந்தியா என்று அழைத்ததை போலஆரியர்கள் தமிழை திராவிடம் என்று பெயரிட்டு அழைத்தார்கள்

இதை எளிமையாக இப்படியும் சொல்லலாம்.
ஒரு பிள்ளைக்கு பள்ளியில் பதிவு செய்துள்ள பெயர் ஒன்றாகவும்...
வீட்டில்...அக்கம்பக்கத்தார் அழைக்கும் செல்லப்பெயர் வேறாகவும் இருக்கும்...ஆனால் இரு பெயர்களும் அந்த ஒரு பிள்ளையையே குறிக்கும்
தமிழுக்கு இன்னொரு பெயர் திராவிடம்.
எதையுமே தெரிந்துகொள்ள விரும்பாத சில தற்குறிகள்..
முட்டுச்சந்தில் நின்றுகொண்டு
திராவிடத்தை ஒழிப்போம் தமிழை காப்போம் என்று கூவுகிறார்கள்.
இவர்களுக்கு இதற்கு மேல் எப்படி சொல்லி புரியவைப்பது ?

சொந்த புத்தியும் இல்லாமல் சொல்வதையும் கேட்காமல் உளறுபவர்களை திருத்தமுடியாது.
தமிழ் மொழி வரலாறு ...மொழி ஒப்பிலக்கணம் போன்ற பன்னாட்டவர் எழுதியுள்ள ஆய்வு நூல்களை வாசித்துவிட்டு வந்தால் அறிவு தெளியும்.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: