சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் அணியானது அதிகார பலத்தைக் கொண்டு அசராமல் வேலைசெய்கிறது. இதை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.செயல்படவேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் தொண்டர்களும் விரும்புகிறார்கள். நடைமுறையில், அக்கட்சியின் செயல்பாடு முந்தைய தேர்தல்களைவிட வேகமாக இருந்தாலும் ஆளுங்கட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லை. தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் தலைமைக்கழகப் பேச்சாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்தல்-பிரச்சார அனுமதி வாங்குவதைக்கூட முறையாக செய்யாமல், பேச்சாளர்களைக் காத்திருக்கவைத்து திருப்பி அனுப்பும் நிகழ்வுகள் தொடர்கின்றன.
பிரச்சாரப் பொறுப்பாளர், கட்சி வக்கீல்கள் தொடங்கி, மாவட்டச்செயலாளர் வரை புகார் தெரிவிக்கப்பட்டும் யாரும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குமுறல் வெளிப்படுகிறது நக்கீரன்
பிரச்சாரப் பொறுப்பாளர், கட்சி வக்கீல்கள் தொடங்கி, மாவட்டச்செயலாளர் வரை புகார் தெரிவிக்கப்பட்டும் யாரும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குமுறல் வெளிப்படுகிறது நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக