திங்கள், 3 ஏப்ரல், 2017

ஸ்டாலின் செயல்பாட்டில் அதிருப்தி அணி மாறும் மாவட்ட செயலர்கள்?

dinamalar : தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அணுகு முறையில் அதிருப்தி அடைந்த, நான்கு மாவட்ட செயலர்கள், எட்டு எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., அம்மா அணிக்கு மாற, ரகசிய பேச்சு நடத்தி வருவதாக, பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க., செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப் பேற்ற பின், கட்சி ரீதியாக சில கொள்கை முடிவுகளை எடுக்கும் போது, தன்னிச்சையாக முடிவு எடுத்து அறிவிக்கிறார். கட்சியை வழி நடத்துவதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாணியில், ஸ்டாலினின் செயல்பாடு உள்ளதால், பல மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர். சமீபத்தில், அ.தி.மு.க., அம்மா அணி வேட்பாளர் தினகரன் அளித்த பேட்டியில், 'தி.மு.க., - எம்.எல். ஏ.,க்களும் எங்கள் பக்கம் வர தயாராக உள்ளனர்' என்றார். இதை உறுதிப்படுத்தும் வகையில், தி.மு.க.,வின், நான்கு மாவட்ட செயலர்கள், எட்டு எம்.எல்.ஏ.,க்கள், ஸ்டாலின் மீதான அதிருப்தியால், அ.தி.மு.க., அம்மா அணியினரிடம் ரகசிய பேச்சுநடத்தி உள்ளனர்.


இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், முதல் வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி, 6 மாதம் வரை நீடிக்காது. எனவே, இடைத் தேர்த லுக்கு பல கோடி ரூபாயை செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.கடைசி நேரத்தில், தேர்தலை < தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதால், வாக்காளர் களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை என்ற முடிவை ஸ்டாலின் எடுத்துள்ளார். அவரது முடிவால், கட்சி நிர்வாகிகளும், தேர்தல் பணி களில் தீவிரம் காட்டாமல் சுணக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: