Union Agriculture Minister Radha Mohan Singh Urinating Public
கடந்த பத்து தினங்களுக்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த
சம்பவம். ஒரு கிராமத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மலங்கழிப்பதற்கென கிராமங்களில் இருக்கக்கூடிய பொதுவிடத்தில் மலங்கழித்துக்கொண்டிருந்தனர். அதை ஸ்வச்ச பாரத் திட்ட அதிகாரிகள் வந்து படம்பிடிக்கிறார்கள். அதாவது மலங்கழிக்கிற பெண்களை போட்டோ எடுத்து அவமானப்படுத்துவதன் மூலம் தூய்மை இந்தியா திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு தரப்போகிறார்களாம்.
பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். செய்தி அறிந்து ஜாபர் ஹூசைன் என்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் ஸ்வச்சபாரத் அதிகாரிகளை தடுக்க வருகிறார். அவரது மனைவியும் மகளும் அந்த பெண்கள் கூட்டத்தில் ஒருவர். தடுக்கவந்த ஹூசைன் ஸ்வச்சபாரத் அதிகாரிகளால் தாக்கப்பட்டு கடைசியில் செத்துப்போய்விட்டார் . (ஜாபர் ஹூசைன் என்ற பேருக்காகவே அவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்டாரா என்பது தனிச்செய்தி)

பத்து
நாட்களுக்கு பிறகு வேறு ஒரு சம்பவம். இந்தியாவின் விவசாயத்துறை அமைச்சர்
ராதாமோகன் சிங் பாதுகாவலர்கள் புடைசூழ பொதுவெளியில் ஒண்ணுக்கு அடிக்கிறார்.
அந்த படம் வெளிவந்து வைரல் ஆகியும் இதுவரை ஸ்வச்ச பாரத் அதிகாரிகள் அவர்
மீது நடவடிக்கை எடுக்கவில்லை..!
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் நாம் ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். பெண்கள் ஒன்றும் சாவகாசமாக தம் அடித்துக்கொண்டு மலங்கழிப்பதற்காக பொதுவெளியில் வரவில்லை. ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூரிலேயே அதிகாலை நேரங்களில் சாலை ஓரங்களில் தான் மலங்கழிப்பார்கள். அப்படியென்றால் கிராமங்களில் நிலைமை எப்படியிருக்கும் என பாருங்கள் . கிராமங்களில் வீடுகளில் கழிப்பறைகள் இல்லை . வேறு வழியின்றி பொது இடங்களுக்கு பெண்கள் மலங்கழிக்க வருகிறார்கள். அவர்களை அவமானப்படுத்த முடிகிற அரசால், ஒரு மத்திய அமைச்சருக்கு எதிராக ஒன்றும் செய்யமுடியவில்லை. வசதி இருந்தும் பொதுவெளியில் ஒண்ணுக்கு அடிக்கிற அவரது பழக்கத்தை மாற்றமுடியவில்லை..! எனில் யார் அழுக்கானவர்கள்..?!
-Sivasankaran Saravanan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக