தொலைக்காட்சியில் நடிப்பது வேறு. தொலைக்காட்சியில் இயல்பாக இருப்பதாகவே நடிப்பது முற்றிலும் வேறு. இதுதான் பிர
ஆனால் கமல் இயல்பில் எப்படி இருப்பார்? அவரது பெர்சனாலிடி தமிழ்
மக்களுக்குத் தெரியுமா? இதுவரை தெரியாது. காரணம் அவர் தன்னைக் கச்சிதமாகத்
தயார் செய்துகொண்டே வெளியுலகில் எதுவாக இருந்தாலும் செய்கிறார். எனவே
இயல்பாக அவர் எப்படி நடந்துகொள்வார் என்பதே நமக்குத் தெரியவில்லை. அவருமே
இயல்பாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள மிகுந்த தயாரிப்பும் பிரயாசையும்
அவருக்கே தேவைப்படுகிறது. இதுதான் நேற்றைய நிகழ்வில் நான் கவனித்த அம்சம்.
தன்னுடைய ஒரிஜினல் இயல்பு எப்படியோ, அதில் வெளிப்படையாகவே இருந்தாலே நிகழ்ச்சி வெற்றி அடைந்துவிடும். அந்த இயல்பு என்தையே கஷ்டப்பட்டு ப்ரிப்பேர் செய்துகொண்டுவந்தால் அது வெளிப்படையாகத் தெரிந்தும் விடும். கமல்ஹாஸன் பிக்பாஸில் தன்னுடைய தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தப் பார்க்கிறார். ஆனால் அது ஒரு ரியாலிடி ஷோ – திரைப்படம் அல்ல என்பதால் அவர் நடிப்பது நன்றாகத் தெரிந்து, நிகழ்ச்சியின் நம்பகத்தன்மையைக் குறைக்கிறது என்பது என் கருத்து.
கமல் இயல்பில் எப்படி இருப்பார் என்று பார்க்க ஆசைப்பட்டுத்தான் பிக்பாஸ் பார்த்தேன். அதில் அது சுத்தமாகத் தெரியவில்லை. நமக்குப் பிடித்த ஒரு ஆளுமையின் வெளிப்படையான இயல்பைப் பார்ப்பதே கடினமாக ஆகிக்கொண்டு இருக்கிறது.
கருந்தேள் ராஜேஷ், திரை எழுத்தாளர். சினிமா ரசனை, திரைக்கதை எழுதலாம் வாங்க ஆகிய நூல்களின் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக