வெள்ளி, 30 ஜூன், 2017

வழிச் செலவுக்குக்கூட பணம் இல்லாத வானதி ஸ்ரீனிவாசன் திடீர் பணக்காரர் ஆனது எப்படி? பாஜக பிரமுகர் வெளியிட்ட ஆதாரம்

வழிச் செலவுக்குக்கூட பணம் இல்லாத வானதி ஸ்ரீனிவாசன் திடீர் பணக்காரர்
ஆனது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த பாலசுப்ரமணிய ஆதித்தன் என்பவர். தமிழக பாஜக பொதுச்செயலாளராக இருக்கும் வானதி ஸ்ரீனிவாசன் மீது இவர் பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தனது முகநூலில் எழுதியுள்ளார்.
“திருமதி வானதி மற்றும் திரு சு.ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு வணக்கம். உங்கள் இருவர் சார்பிலும் தனித்தனியே எனக்கு Legal Notice அனுப்பியுள்ளீர்கள்.
அதை பெற்றுக் கொண்டேன்: கடந்த 2003 ம் ஆண்டு நான் பாஜக தூத்துக்குடி மாவட்ட பொருளாளராகவும், திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்த போது திருச்செந்தூரில் ஆர்பாட்டம் நிகழ்ச்சிக்கு பேச வந்து இருந்தீர்கள். வழிச் செலவு பணமும் தந்து சில நூறையும் தந்தோம். >அப்போது நீங்கள் ஒரு நடுத்தர வாழ்வில் இருந்தீர்கள் என்பதை நன்கு அறிவேன். அது மட்டுமல்ல மைலாபூரில் நம் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடையில் ரூ 700 விலை உள்ள Sealing Fan 5 Installment க்கு வாங்கி அதில் 4 தவணை மட்டும் தாங்கள் கட்டிய விபரம் உட்பட அரசல் புரசலாக நம் பாஜகவினரே பல முறை பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். இது கூட உங்களை சிறுமைப் படுத்த இங்கு குறிப்பிடவில்லை. உங்கள் பொருளாதார சூழலை சுட்டிக் காட்டவே விரும்புகிறேன் . ஒரு தவணை உங்களால் கட்ட முடியவில்லையாம்.

யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் இன்று தாங்கள் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கின்றீர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும் ? என்றும் எனக்கு தெரியவில்லை.
இந்நிலையில் கடந்த 2014 ம் ஆண்டு மாண்புமிகு பாரத பிரதமராக மோடிஜி அவர்களது அரசு பதவியேற்ற பின்பு ,
உங்கள் தேர்தல் affidavit படி நீங்கள் காட்டியுள்ள சொத்துக்களை பார்த்த போது நான் உண்மையிலேயே அதிர்ந்துதான் போனேன்.

இது ஒரு புறம் இருக்க உங்கள் சகோதரர் திரு சிவகுமார் கந்தசாமி அவர்களை டைரக்டர் ஆக கொண்ட Zylog Systems Europe Ltd ன் சகோதர நிறுவனமான Zylog Systems India Ltd ( இது என்ன Europe புதுக்கதை என்கிறீர்களா ? ) நிறுவனத்திற்கு எதிராக Union Bank of India கொடுத்த புகாரின் பேரில் CBI அந்நிறுவனம் மீது FIR பதிந்துள்ளது. அனைவரும் அறியும் வண்ணம் நாளிதழில் செய்தியும் வந்தது.
எனக்கும் சில நபர்கள் மூலம் FIR உள்ளிட்ட ஆவண நகல்கள் கிடைத்தது. உங்கள் இருவரின் நோட்டீஸ்களிலும் குறிப்பிடப்பட்ட அந்த மே மாத பதிவுகளில் அந்த ஆவணங்கள் அடிப்படையிலேயே எனது (Face Book) முக நூலில் போட்டிருந்தேன்.

என்னிடம் ஏற்கனவே இருந்த ஆதாரங்களுடன் அதிர்ச்சி அளிக்கத்தக்க மேலும் பல ஆதாரங்கள் கிடைத்ததால் 145 பக்கங்கள் கொண்ட மொத்த ஆதாரங்கள், புகைப்படங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு நமது தேசிய தலைவர் திரு அமித்ஷா ஜி, பிரதமர் அலுவலகம், மாண்புமிகு உள்துறை அமைச்சர், மேலும் பல அதி முக்கிய துறைகள் சார்ந்த அமைச்சகம் மற்றும் அதிகாரிகளிடம் நேரில் அளிக்கப்பட்டது.
நமது தேசிய தலைவர் அந்த ஆதாரங்களை கண்டு அதிர்ச்சியடைந்ததோடு மட்டுமல்லாமல் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் ,
அகில இந்தியத் தலைமையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தாங்கள் Legal Notice ல் குறிப்பிட்டபடி அதற்கு பின் வலைத்தளத்தில் அகில இந்திய தலைமையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு பதிவிடுவதை நிறுத்தி வைத்தோம்.
இந்நிலையில் தங்களின் வக்கில் நோட்டீஸ் கிடைத்தது. தாங்கள் என் மீது வழக்கு தொடர்ந்தால் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைமையிடம் அனுமதி பெற்று அந்த ஆவணங்களை மாண்புமிகு நீதி மன்றத்தில் சமர்பிக்க நான் தயாராக இருக்கிறேன் என்பதை தங்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை தங்கள் மின் அஞ்சலுக்கும் அனுப்புகிறேன்.
vanathibjp@gmail.com
திருச்செந்தூரில் நான் நடத்திய பாஜக ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் (திருமதி.வானதி) கலந்து கொண்ட புகைப்படம்.
அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்  thetimestamil.com

கருத்துகள் இல்லை: