புதன், 28 ஜூன், 2017

News 7 டிவி ... பார்ப்பான் எந்த காலத்திலடா உண்மை பேசினான்? S.V.சேகர் + நாராயணன் அடாவடி!


யோகா: கலையா? அரசியலா?” நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நடந்த விவாதம் அடுத்த கட்டத்திற்கு போய்விட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமாறனை நேரடியாகவே மிரட்டினார், பாஜக-வின் நாராயணன். அவரது மிரட்டல், கூச்சலைத் தொடர்ந்து நிகழ்ச்சியும் பாதியில் முடிந்தது. அதை முழுவதும் முடிப்பதற்கு களமிறங்கினார் பா.ஜ.க-வின் எஸ்.வி.சேகர்.
ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் நாராயணன் கூறிய மிரட்டலை நடைமுறைப்படுத்தியதை விளக்குகிறார். நியூஸ் 7 தொலைக்காட்சி உரிமையாளரான வைகுண்டராஜனுக்கு போன் போட்டு ஏன் இப்படி பிராமணர்களை திட்டுவதை அனுமதிக்கிறீர்கள் என்று உரிமையுடன் அண்ணாச்சியிடம் கேட்டாராம். அண்ணாச்சியும் உடனே அப்படி பேசியவனை இனி உள்ளே விடமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தாராம். இதில் அவன் இவன் என்று ஒருமையில் பேசுகிறார் சேகர்.
அதே போல விவாதங்களில் அடாவடி செய்யும் பாஜக பேச்சாளர்களை புறக்கணிப்பது தொடர்பாக சி.பி.எம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் திமுக தரப்பில் ஒருவர் கலந்து கொள்ள இருந்தாராம். உடனே ஸ்டாலினுக்கு போன் போட்ட சேகர், அதை எடுத்துச் சொன்னாராம். பிசியாக இருந்த மு.க.ஸ்டாலினும் உடனே சம்பந்தப்பட்ட தி.மு.க நபரை போகவேண்டாமென தடுத்து விட்டதாக சேகரிடம் கூறினாராம்.

மணல்முழுங்கி வைகுண்டராஜனை, மிகவும் எளிமையான அண்ணாச்சி என்று சான்றிதழ் கொடுக்கிறார் எஸ்.வி.சேகர். ஆக இயற்கை வளத்தை மத்திய மாநில அரசுகளின் தயவில் முழுங்கிய மெகா ஊழல் பெருச்சாளிகளெல்லாம் பார்ப்பனர்களின் உத்திரவை ஏற்கும் பட்சத்தில் எளிமையானவர்களாக நற்சான்றிதழ் பெறுவார்கள். அதே போன்று ஸ்டாலினும் பிரமாணர்களின் நண்பராக சான்றிதழ் பெறுகிறார்.
இந்த விவாதத்தை மதிமாறன் திசைதிருப்பியதாகவும், குறிப்பிட்ட சாதியை – பார்ப்பனர்களை இழிவுபடுத்தியதாகவும் விளக்குகிறார் சேகர். ஆனால் அந்த உண்மையில் நாராயணன்தான் முஸ்லீம்கள், கிறித்தவர்களை இழிவுபடுத்துவதோடு, மதிமாறன் பேசிக் கொண்டிருக்கும் போது வம்படியாக நுழைந்து நிறுத்துகிறார். மூன்று சதவீத பார்ப்பனர்கள் 97 சதவீதம் மக்களிடம் புகுத்தும் யோகாவை மதிமாறன் அம்பலப்படுத்தும் போது நான் பூணூல் போட்ட போக்கிரிதான் என்பதை நாராயணன் பகிரங்கமாகவே கூறுகிறார்.
சாதி, மதவெறிச் சண்டைகளில் ஒரு பார்ப்பனர் மீதாவது எஃப்ஐஆர் போடப்பட்டிருக்கிறதா என்று சவால் விடுகிறார் எஸ்.வி.சேகர். அதைப் பார்த்து சங்கரராமன் ஆவியும், அவரது குடும்பத்தினரும் அபாண்டமாக பொய் சொல்லும் சேகர் மீது கேஸா போட முடியும்? முதல் குற்றவாளியான ஜயேந்திரனை மத்திய அமைச்சர்களும், குடியரசுத் தலைவர்களும் பவ்யமாக வந்து பார்க்கும் போது சேகர் ஏன் இப்படி பூணூலை உறுவி பேசமாட்டார்?
ஹிட்லர் கூட தனது துப்பாக்கியால் ஒரு யூதரையோ, கம்யூனிஸ்டையோ கொன்றதில்லை. அதே போல ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவர்களான சித்பவர் பாரப்பனர்களும், நேரே வாளை எடுத்துக் கொண்டு தலை வெட்ட செல்வதில்லை. ஆனால் அவர்களது உத்திரவு நிறைவேற்றப்படுவதால்தான் இங்கே ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர்.
நியூஸ் 7 விவாதத்தில் யார் அடாவடி செய்தார் என்பதை இந்த வீடியோ நிரூபிக்கிறது. எஸ்.வி.சேகர் கூறும் குற்றச்சாட்டுக்களை செய்தவர் மதிமாறனல்ல, நாராயணன்தான். ஆனால் குற்றம் செய்த நாராயணனை யாரும் தட்டிக் கேட்க கூடாது என்பதற்கே எஸ்.வி.சேகர் மதிமாறனையும், நெல்சன் சேவியரையும் குற்றம் சாட்டுகிறார்.
ஊடகங்கள் அனைத்தும் காவி பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் போய்விட்டது என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும்? வைகுண்டராஜன், பச்சமுத்து போன்ற மக்கள் விரோதகளின் கையில் தொலைக்காட்சிகள் இருக்கும் போது  பா.ஜ.கவிற்கு என்ன பிரச்சினை? மு.க.ஸ்டாலின் போன்றோர் சேகர் போன்ற பார்ப்பன வெறியர்களின் வேண்டுகோளை கட்டளையாக நிறைவேற்றும் போது தமிழகத்தில் தாமரை ஆட்டம் போடாதா என்ன? வினவு

கருத்துகள் இல்லை: